பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருவெம்பாவை விளக்கம்

-ஏசப் போவதற்கு முன், முன்னிலைப்படுத்துவதாய் அமைகிறது. உள்ளே போதார் அமளியில் உறங்கும் பெண் நேற்று மற்றவர்களை நோக்கி, நாளை நான் உங்கள் எல்லோரையும் வந்து எழுப்புவேன்’ என்று தானாகவே முன்வந்து சொன்னாள். ஆனால் அப்பேச்சு காற்றிலே கரைந்து போயிற்று; எத்திசையிலோ ஒடி ஒளிந்து போனது. அது எந்தத் திசைக்குப் பரந்தோடி விட்டது என்பதனை

வெட்கப்படாமற் சொல் என்றார்கள். நீ நென்னலை நாளை வந்து உங்களை நானே எழுப்புவன் என்றலும் நானாமே போன திசை பகராய்” . இவ்வடிகளின்

கருத்தாழம் காணத்தக்கது. இன்று இப்பொழுது உறங்கிக் கொண்டிருப்பவள் நேற்றுதான் தானே வலிய வந்து சொன்னாள். என்ன சொன்னாள்? நாளைக்கு நானே வந்து உங்களைத் துயிலிலிருந்து எழுப்புவேன் என்றாள். நேற்றுப் பேசிய பேச்சு நேற்றோடே போய் விட்டதே! நானே வந்து உங்களை எழுப்புவேன் என்றாள். வலிய அவளே வந்து சொன்ன வாய் வார்த்தைகள் காற்றோடு கலந்து விட்டனவே! நானே - என்பதிலுள்ள ‘ஏ’ - ஏகாரம் எனப்படும். அதனைப் பிரிநிலை ஏகாரம் என இலக்கண நூலார் உரைப்பர். வேறு யாரும் வந்து உங்களை எழுப்பப் போவதில்லை. நானே வந்து எழுப்பப் போகிறேன் என்றாள். அவள் பேச்சுக்கு அவளே இப்போது நாணித் தலைகுனிய வேண்டும். அவள் பேச்சு எந்தத் திசையில் போய் ஒளிந்ததோ தெரியவில்லை என்பது மட்டுமல்ல. மற்றவர்களைத் தானே வந்து எழுப்பு வதாகச் சொன்னவள், இப்பொழுது மற்றவர்கள் வந்து தன்னை எழுப்பும் நிலையில் உள்ளாள். அது மட்டுமல்ல. ‘இன்னம் புலர்ந்தின்றோ என்று வந்த பெண்கள் கேட்

கின்றார்கள். எல்லோருக்கும் பொழுது விடிந்து விட்டது; உனக்கு மட்டும் இன்னும் பொழுது விடிய வில்லையா?’ என்னும் குறிப்பினையும் உட்கொண்ட

தொடராக விளங்குகின்றது எழுப்ப வந்த பெண்களின்