பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 திருவெம்பாவை விளக்கம்

  • கற்பு’ என்பதற்கே கணவன் கற்பித்த வழியிலே நிற்றல்” எனப் பொருள் கூறுவர் பண்டைச் சான்றோர். அவ் வகையில் அக்கண வன்மார் மகிழ்ச்சியுடன் என்னென்ன செயல்களைச் செய்யுமாறு ஏவுகின்றார்களோ, அச்செயல் களையெல்லாம் விருப்புடனே விரைந்து செய்து முடிப் போம் என்னும் பாடறிந்தொழுகும் பண்பன்றோ! மேற் குறித்த வகையில் உன் அடியவரையே எங்கட்குக் கணவராக அமைய நீவிர் அருளாணை பிறப்பிப்பீராயின் எங்கட்கு இவ்வுலகில் யாதோர் குறையும் இல்லை; நன்கு வாழ்வோம் என்று புகன்றவாறு. இத்திருப்பாட்டு, இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்’ என்று நம்பிக்கை யொளியோடு கூடிய உறுதிப்பாட்டுடன் முடிகின்றது.

குறைவிலோம் கொடுமா நுட வாழ்க்கையால் கறை கிலாவிய கண்டன்என் தோளினன் மறைவலான் மயிலாடு துறையுறை இறைவன் நீள் கழலேத்தி யிருக்கிலே அஎன்பது திருநாவுக்கரசர் தேவாரம்.

முன்னைப் பழம்பொருட்கு

முன்னைப் பழம்பொருளே! பின்னைப் புதுமைக்கும்

பேர்த்தும் அப் பெற்றியனே? உன்னைப் பிரானாகப்

பெற்றவு ன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம்

ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர்

ஆவார் அவர் உகந்து சொன்ன பரிசே

தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே

எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும்

இலோம் ஏலோர் எம்பாவாய்!