பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. பாதாளம் ஏழினும்

பாதாளம் ஏழினுங்கீழ்

சொற்கழிவு பாதமலர் 

போதார் புனைமுடியும்

எல்லாப் பொருள்முடிவே! 

பேதை ஒரு பால்

திருமேனி ஒன்றல்லன் 

வேதமுதல் விண்ணோரும்

மண்ணுங் துதித்தாலும் 

ஓத உலவா

ஒருதோழன் தொண்டருளன் 

கோதில் குலத்தரன்தன்

கோயிற்பி ணாப்பிள்ளைகாள்!

ஏதவன்ஊர்? ஏதவன்பேர்?

ஆர் உற்றார்? ஆர்அயலார்

ஏதவனைப் பாடும்

பரிசுஏலோர் எம்பாவாய்!

மேலைத் திருப்பாட்டில் கன்னியர்தம் உள்ளத்து உறுதிப்பாட்டினை உணர்த்திய மாணிக்கவாசகர் பெருமான், இத்திருப்பாட்டில் அவர் எதிரே வந்துற்ற திருக்கோயிற் பணிமகளிரைக் கண்டு, காலமும் இடமும் அனைத்தும் கடந்து நிற்கும் சிவபரம்பொருளின் உண்மை இயல்பினை ஆராயும் போக்கில் வினவிய முறையை அறிவுறுத்தலுறுகின்றார்.

திருக்கோயிலிற் பணிசெய்யும் பெண்களைக் கண்ட கன்னியர், அவர்கள் அரன் பணியினை நித்தலும் அணுக்கத் தொண்டராய் அமைந்து ஆற்றும் பேறு பெற்றவராதலின் "கோதில் குலத்து அரன் தன் கோயிற்