பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 திருவெம்பாவை விளக்கம்

பிணாப் பிள்ளைகாள்’’ என விளித்தனர். இறைவனுக்கு உண்மையாக உறுதியாகத் திருப்பணியாற்றும் அடிய வர்கள், தம்முன் எதிர்ப்படும் சிவனடியார்களைத் தம்மினும் அவர்கள் சித்தம் சிவன்பாலே வைத்தவர்கள், செல்வன் கழலேத்தும் செல்வமே செல்வம்’ என்று நினைப்பவர்கள் என்று கருதி, அவர்தம் வழி இறை யருளைப் பெற விழைதலும், தம்மை இறைவன் வந்து ஆட்கொண்டு நலம் செய்வாரோ என வினவுவதும் தம் ஆர்வ மிகுதியான் என்ப. திருநாவுக்கரசர் பெருமானைக் காணாத நிலையிலும் அவர்தம் திருப்பெயரினைத் தம் பிள்ளைகளுக்கும், தண்ணிர்ப் பந்தலுக்கும், மலர்ச் சோலைக்கும், அளவைச் சாதனங்களுக்கும், ஏன்? அனைத்துப் பொருள்களுக்கும் வைத்து அப்பதி அடிகளார் தம் பேரன்புப் பெருக்கினைப் புலப்படுத்திக் கொண்டமை யினைத் திருத்தொண்டர் புராணம் கொண்டு தெளிய

Gl) TT LD .

திருக்கோவிலில் பணியாற்றும் அரனுக்கே ஆட்பட்ட தொண்டு மகளிர் குற்றமற்ற ஒரு குறிக்கோள் வாழ்க்கையை உடையவராவர். தம்பியார் உளராக வைத்த தயாவினால், அம்பொன் மணிநூல் தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி இம்பர் மனைத்தவம் இடந்த திலகவதியார், தம்பி மருள்நீக்கியார் நம்பர் அருளாமையினால் தென்பாடலியாம் திருப்பாதிரிப் புலியூர் சார்ந்து தருமசேனர் எனும் பட்டம் பெற்றுச் சமண சமயத் தொடக்குற்று வாழும் நாளில், தாம் பிறந்த திருவாமூர்ப் பதியை விட்டகன்று அண்மையிலிருக்கும் திருவதிகைப் பதிபோந்து, கெடில நதிக்கரையில் விளங்கும் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலில் திருத்தொண்டு செய்யத் தலைப்பட்டமை ஈண்டு நினைக் கற்பாலதாம்.

வைகறையில் எழுந்து, நீராடி, தம் உடம்பைத் துாய்மை செய்து, திருவலகு கொண்டு திருக்கோயிலைச் சுத்தம் செய்து, நந்த வனத்து மலர்களைக் கொய்து