பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 திருவெம்பாவை விளக்கம்

செறிந்த தீயைப் போலும் செம்மை நிறமுடைய திருமேனி வாய்ந்தவனே! வெண்மை நிறமுடைய திருநீறு பூசியவனே; அருட்செல்வத்தை யுடையவனே! சிறிய குடையினையும் மை தீட்டிய அகன்ற கண்களையும் உடைய பெண்ணாகத் திகழும் உமையம்மையாருக்குக் கணவனே! தன்னிகரற்ற தலைவனே! என்று சிவபிரானை ஏத்தி இறைஞ்சுகின்றனர்.

சிவன் என்றதும் நினைவுக்கு வருவது அவனுடைய கரிய நிறம். அப்பர் பெருமானும் செய்யனே கரிய கண்டனே’ என்று பாடுவர். ஞானசம்பந்தரும் செய்யன் வெள்ளியன் ஒள்ளியார்’ என்பர். இவ்வாறு சிவனைக் கன்னியர்கள் நினைத்துக் கொள்வதற்குக் காரணம் உளது. புறத்துாய்மை நீரான் அமையும்’ என்பார் திருவள்ளுவர். எவ்வாறு நீர் உடல் அழுக்கைப் போக்கித் துாய்மை செய் கின்றதோ அதுபோல, .ெ ந ரு ப் பு, தன்பாற்பட்ட பொருளின் அழுக்கினைச் சுட்டெரிக்கும் திறம் சான்ற தாகும். சிவனும் உயிர்களைப் பாசம் நீக்கித் தன்பாற் படுத்திச் செம்மை சேர்க்கும் திறம் சான்றவனாவன். எனவே தான் தங்கள் மனமாசுகளைத் துாய்மை செய்யும் சிவனை முதற்கண் நினைத்து அவனை ஆரழல்போற் செய்யா என அமைத்தனர். இவ்வாறு சிவனது சிவந்த திருமேனியை நினைத்தவர்கள், அம்மேனியின் மீது தும்பை மலரின் நிறமெனத் துலங்கும் திருவெண்ணிறு கண்டவராய் வெண்ணிறாடி என அவனை மேலும் அழைத்தனர். செய்ய மேனி வெளிய பொடிப் பூசுவர் சேரும் மடியார் மேல், பைய நின்றவினை பாற்றுவர் எனத் திருஞான சம்பந்தரும் பேசுவார். ஒருவர் தம் பாசப் பிணிப்பை அகற்றிவிட்டால் அவர்க்குச் சிவன் முத்தியருளுவது என்பது நிச்சயமாகும். எனவேதான் மூன்றாவதாக முத்திச் செல்வத்தை அளிப்பவன் என்னும் பொருளில் செல்வா என்றார்கள் கன்னியர்கள். சிவனை அடையும் எளிதான வழி அவனது அருட்சத்தியாக விளங்கும் அம்மையை நினைவு கொள்வதாகும். எனவே சிற்றிடை