பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. ஆர்த்த பிறவித் துயர்கெட

ஆர்த்த பிறவித்

துயர்கெடநாம் ஆர்த்தாடும் தீர்த்தன்! நற் றில்லைச்சிற்

றம்பலத்தே தீயாடும் கூத்தன்! இவ் வானும்

குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும்

கரங்தும் விளையாடி வார்த்தையும் பேசி

வளை சிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய

அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை

குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீர்

ஆடேலோர் எம்பாவாய்!

தங்களை இளைப்பு ஏதும் இன்றிக் காக்க வேண்டும் என்று மேலைத் திருப்பாட்டில் வேண்டிக் கொண்ட கன்னி யர்கள், இத்திருப்பாட்டில் அவனது பரந்த அருளைப் பாராட்டி நீராட நினைவு கொண்டு, அதற்கேற்ற வண்ணம், ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்” என்று தொடங்கினர்.

வினைகள் இருவகைப்படும். அவை நல்வினை, தீவினை என்பனவாம். நல்வினை செய்வார் பொற்ப டி.