பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டர் சி. பாலசுப்பிரமணியன் 63:

1.சாதலும், தீவினை செய்வார் அருநரகு சேர்தலும் |யல்பு எனச் சிலப்பதிகாரம் செய்யும். அவரவர் தாம்

காம் செய்யும் வினைகளுக்கேற்பவே இறைவனால் கூலி

பெறுகின்றனர். ஒருவனை விட்டு நீங்காத நிழல்போல்,

ால்வினையும், தீவினையும் ஒருவனை விடாது தொடர்

ன்ெறன. எழுபிறப்பு உண்டென்று நம்புவது நம் மரபு. வழுமை எழுபிறப்பும்’ என்பர் திருவள்ளுவர்.

ஏழ்பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்காப்

பண்புடை மக்கள் பெறின்

என்னும் திருக்குறளால் திருவள்ளுவர்க்கு எழு பிறப்பு.

டன்பாடாதல் உறுதி. செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம் பெருமான்’ என்ற மணிவாசகரின் மணிமொழி, ஈண்டு. ஆர்த்த பிறவி என வந்துள்ளது. ஆர்த்த பிறவித்துயர்’ என்பது வினைப் பயன்களை நுகர்விக்க வந்த பிறவியாகிய துன்பமாகும். இறந்த பிறப்பில் எய்திய வெல்லாம் பிறந்த பிறப்பிற் காணாயோ நீ’’ என்பது சிலம்பு உணர்த் தும் செந்நெறி. எனவே பிறவி என்பதே துன்பம் என்ற கருத்தும் உண்டு. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்’ என்னும் திருவள்ளுவர் குறளை நோக்கும்பொழுது இறைவன் திருவடிப் பேறு பெறாதார் மீண்டும் மீண்டும் இவ்வுலகிற் பிறந்து கொண் டேயிருப்பர் என்பது பெற்றாம். பிறந்தார் உறுவது பெருகிய துன்பம் பிற வார் உறுவது பெரும்பே ரின்பம்’ என்று மணிமேகலைக் காப்பியம் முழங்கும். எனவே உலகின் பல சமயங்களும் பிறவியினைப் பிணியென்றே: கருதியமை புலப்படும். ஆனால் அருளாளர்கள் கிடைத்த பிறவியைச் சிவனது அருள்பெற்று உய்தற்குரிய நல்ல வழி எனக் கொண்டு அவனருளாலே அவன்தாள்’’ வணங்” னெர். வாய்த்தது ஈது நந்த மக்கு ஒரு பிறவி’ என்று” கருதியமை அவனோடு உற்றுப் பெறும் இன்பமேயாகும்.