பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so திருவெம்பாவை விளக்கம்

பிறவிப் பிணி அகல வேண்டுமெனில் இருவகைத் துய்மை களும் எய்த வேண்டும். ஒன்று புறத்துய்மை, பிறிதொன்று அகத்துாய்மை புறத்துய்மை நீரான் அமையுமாதலால் பொய்கையிற் புகுந்து நீராட வந்தனர். அதனால் உடல் மாசு அகன்றது. ஆண்டவன் அருளைப் பரவிப் பாடி நிற்றலால் மனம் மாசு நீங்குகிறது. எனவே மனவிருள் அகன்று ஒளி துலங்குகின்றது. சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே என்று திருவாலங்காட்டுத் திருத்தாண் டகம் குறிப்பிடுமாப் போல், சிவன் துரய தெளிந்த நீரைப் போன்றவனாயிருத்தலின் தீர்த்தன்’ என அழைக்கப் பெற்றான்.

அடுத்து, தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன் என்றனர். சைவர்கள் கோயில் என்று சொன்ன அளவி லேயே அது சிதம்பரத்தைக் குறிக்கும். தெய்வச் சேக் கிழார் பெருமானும் ஆனாத சீர்த்தில்லை என்று திருநாவுக்கரசு சுவாமிகள் புராணத்தில் தில்லையின் சிறப் பைத் திருத்தமுறக் குறிப்பிடுவார்.

அகண்ட வெளியையே அரங்கமாக்கிப் பெருமான் கூத்தாடுகிறான். ஆதலின் சிற்றம்பலத்தே கூத்தன்’ என்றார். கையில் அனலை ஏந்தி ஆடுவதனால் தீயாடும் கூத்தன்’ என்றார். கூத்து இருவகைப்படும். ஒன்று விநோதக் கூத்து; பிறிதொன்று சாந்திக் கூத்து. இறைவன் ஆடுங்கூத்து சாந்திக் கூத்தாகும். இக்கூத்து, உயிர்கட்குப் பிறவி வெப்பத்தை மாற்றி இன்பமூட்டும் தன்மை வாய்ந்ததாகும். மேலும் உலக உயிர்கள் உய்யும் பொருட்டு, இறைவன் ஐந்தொழில் இயற்றும் பான்மையை யுணர்த்துவது இக்கூத்து என்பாருமுளர். வானும், குவல யமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளை யாடி’ என்றார். வான், காற்று, நீர், தீ, நிலம் என்னும் ஐந்து பூதங்களும் இறைவனால் உலக உயிர்களின் நன்மையை நோக்கிப் படைக்கப்பட்டவை. இவ்வைந்தை .யும் குறிப்பாகச் சுட்டவே முதலாவது வானையும், இறுதி