பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்டர் சி. பாலசுப்பிரமணியன் 77

வார் உருவ பூண் முலையீர்’ என்பது விளி. “கச்சினை யுடைய அழகிய அணிகலன்கள் அணிந்த ந கில்களை

யுடையீர்’ என்பது இதன் பொருளாகும். வார் உருவி நிற்றல்’ என்ற குறிப்பால் கன்னி மணப்பருவம் உற்றிருக் கிறாள் என்பது பெறப்பட்டது. பூண்முலை’ என்ற

குறிப்பால் முலை சுரக்கும் பாலைக் குழவிகட்கு ஊட்டி வளர்க்கும் தாய்போல், இறைவனது சத்தி, உயிர்களுக்குப் |ாந்து நிற்கும் நிலையினை வெளிப்படுத்தியவாறாம்.

இவ்வாறு விளித்துச் சிவபெருமான் திருவருள் பெற் றாள் ஒருத்தியின் சொல்லும் செயலும் இவ்வாறு இருந் தன என அறிவிப்பாள் ஒருத்தி,

ஒரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெரு மான்சீரொருகால் வாயோவாள் சித்தங்களிகூர, நீரொருகால் ஒவா நெடுங்தாரை கண்களிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்

என்றாள்.

“ஒவ்வோர் சமயத்தில் எமது தலைவனே என்று பல முறை சொல்லிச் சொல்லியே, நமது தலைவனுடைய புகழினை ஒருமுறையோடு நிறுத்தாது வாய் ஒயாது பேசுவாள்’ என்றாள். உலகில் வாழும் உயிர்கள் துன்பப் படுவதெல்லாம் தான்’ என்னும் அகந்தையால் அமைவ தென்றும், தம்மையும் ஏனைய பொருள்களையும் உடைப் பொருள்களாக இறைவன் உடையவன் என்றும், அனுபவத்தால் இறைவனே தமக்குக் கதியாவான்’ என்றும் நினைவுக்குக் கொண்டுவரும் அடியவர், ஒவ்வோர் அமையத்தில் எம்பெருமான் என்று பலமுறை அரற்றுவார் என்பது விளங்க, ஒரொருகால் எம்பெருமான் என் றென்றே என்றார். ஒருயிர் எப்பொழுது தன்னை இறை வனுக்கு முற்றிலும் அடிமை என்று நினைத்துக் கொள் கிறதோ அப்போதுதான் இறைவனை உணர்தல் கூடும்.