பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. ஒரொரு காலெம்பெருமான்

ஒரொருகால் எம்பெருமான்

என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள்

சித்தங் களிகூர நீரொருகால் ஒவா

நெடுங் தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள்

விண்ணோரைத் தான்பணியாள்

பேரரையற் கிங்ஙனே

பித்தொருவர் ஆமாறும் ஆரொருவர் இவ்வண்ணம்

ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர்! வாயார காம்பாடி ஏருருவப் பூம்புனல் பாய்ந்(து) ஆடேலோர் எம்பாவாய்!

இறைவன், இறைவி ஆகிய இருவர்தம் சிறப்பினைக் குறிப்பிட்ட மாணிக்கவாசகர், இறைவனுக்கு ஆட்பட்டு விட்ட ஒருத்தியின் சொல்லும் செயலும் இவ்வாறிருந்தன என்று கன்னியருள் ஒருத்தி, மற்றையோருக்கு அறிவிப் பாள் போன்று உணர்த்தும் போக்கில் இத்திருப்பாட் டினை அமைத்துள்ளார்.