பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. முன்னிக் கடலைச் சுருக்கி

முன்னிக் கடலைச்

சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை

ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம்

பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற்

சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி

நம் தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா

எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு

முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய்

மழையேலோர் எம்பாவாய்!

இறையருள் நிலை இதுவென்று கூறியருளிய மணிவாசகப் பெருந்த கையார், முன்னிக் கடலைச் சுருக்கி’ எனத் தொடங்கும் இத்திருப்பாட்டில் சிவானுபவ. நிலைக்குக் காரணமாகத் திகழ்வது இறைவன் தன்