பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 82 திருவெம்பாவை விளக்கம்

கணக்கிலாத் திருவருளே என்று கூறி, அத்திருவருள் உயிர்களுக்குக் கிட்டும் நிலையினை மழையெனும் எடுத்துக் காட்டுத் தந்து விளக்குகின்றார்.

கன்னியர்கள் முதலில் மழை மேகத்தினை வாழ்த்து கிறார்கள். மழையே! கடலை முன்னிச் சுருக்கி எழுந்து உடையாள் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டு இடை இன்மின்னி பொலிந்து, எம்பிராட்டி திருவடிமேல் பொன்னம் சிலம்பு இன்சிலம்பி, திருப்புருவம் என்ன சிலை குலவி, நம் தம்மை ஆளுடையான் தன்னில் பிரிவிலா எம் கோமான் அவள் அன்பர்க்குள் நமக்கும் முன் முன்னிச் சுரக்கும் இன் அருள் சூழ என்னப் பொழியாய்’ என வேண்டுகின்றனர்.

சிவனார் திருவடிகளை வாயாரப் புகழ்ந்து பாடி நீராடுகின்ற கன்னியர்கள் தடாகத்து நீரைக் கண்டு, அது மழை பொழிந்ததன் பயனால் வாய்த்தது என்று கருதி, அதனைச் சிவனும் உமையும் திருவருளைச் சொரிந்து நிற்கின்ற தன்மையாக நீரைப் பொழிவாய் என்று போற்றத் தொடங்கி, முதற்கண் மழையை விளிப்பாராய் மழையே’ என்றார். ஈண்டு மழை என்பது ஆகுபெயராய் மேகத்தை உணர்த்தியது. மேகத்தை விளித்த அவர், அதன் படிப்படியான செயல்களைத் தொடர்ந்து சிந்திப் பாராய் வெண்முகிலாகத் தொடக்கத்தில் துலங்கிய அம்மேகம், கடலைச் சென்றடைந்து நீரை முகந்து கொண்டு வானிடை வலமாக எழுந்தபொழுது, கருநிறம் பெற்று மழைமேகம் ஆன நிலையினைக் குறிப்பிடுவார் போன்று, முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள் என்னத் திகழ்ந்தது என்றார். உமாதேவியாரின் திருமேனி கருநிறமாதலின் கடலில் நீர் முகந்த மேகம் வானிடை எழுந்துபோது கருநிறம் பெற்று மழைமேகம் ஆயினமையை உவமை கூறினார். திருவிளையாடற்புராணத்திலும்,