பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. செங்கணவன்

செங்க ணவன்பால்

திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர்

இன்பம்கம் பாலதாக் கொங்குண் கருங்குழலி

கந்தம்மைக் கோதாட்டி இங்குகம் இல்லங்கள்

தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதங்

தந்தருளுஞ் சேவகனை அங்கண் அரசை

அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப்

பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல்பாய்ந்(து)

ஆடேலோர் எம்பாவாய்!

இறைவி இறைவர்களது திருவருள் போன்று மழை பொழியுமாறு கன்னியர்கள் வேண்டினர். இத் திருப் பாட்டில் இறைவி உயிர்களின் குற்றங்களை நீக்குதலும், இறைவன் அவைகள் ஈடேற்றம் பெற அருளும் திறமும் உணர்த்தப்படுகின்றது எனலாம். மழையை வேண்டிநின்ற கன்னியர், தங்கள் பெண் குலத்திற்குத் தனி நாயகியாகத் திகழும் உமாதேவியைக் கருத்திற் கொள்வாராய் கொங்குண் கருங்குழலி’ எனத் தொடங்கினர்.