பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 திருவெம்பாவை விளக்கம்

உயிர்களின் பாகங்களைக் கட்டறுத்து, இறைவன் அருளுகின்ற எளிவந்த தன்மையினை இதுகாறும் சொல்லிவந்த மணிவாசகப் பெருந்த கையார், இத்திருப் பாட்டில் இறைவனது அத்துவித நிலையைக் கன்னியர்கள் வாய்வழிப் புலப்படுத்தி நிற்கின்றார். இங்குக் கன்னி யர்கள் தங்களுள் ஒருத்தியைப் பெண்ணே என விளித்துப் பேசத் தொடங்குகின்றனர்.

பெண்ணே! திருவண்ணாமலையில் திருக்கோயில் கொண்டுள்ள அண்ணாமலையானது திருவடித் தாமரை மலர்களைச் சார்ந்து வணங்கும் தேவர்களது முடியின்கண் விளங்கும் பல வகைப்பட்ட இரத்தினங்களும் பொளி விழந்து ஒளி மழுங்கியது போலவும், எங்கும் பரவி நிற்கும் இருள் நீங்க, உலகெங்கினும் காலையில் கதிரவன் ஒளி தோன்றலும், குளிர்ச்சி பொருந்திய ஒளி நீங்கி விண்மீன்கள் மறைந்து நிற்கின்ற தன்மை போலவும், பெண்ணாகியும் ஆணாகியும் அலியாகியும், ஒளியை உமிழும் இரு சுடர்களாம் சூரியன் சந்திரன் இவைகளைப் பொருந்திய ஆகாயமாகியும், நிலமாகியும், இவைகளுக் கெல்லாம் வேராகியும் ஞானத்தால் உணர்வார்க்கு அமுதமயமாகியும் கலந்து என்றும் எங்கும் நீக்கமற விளங்குபவனாகிய சிவபெருமானது திருவடிகளைப் பாடி

இந்த அழகு நிறைந்த நீரினில் தாவிக் குதித்து நீராடுவோ மாக’’ என்று பேசினர்.

இறைவனும் உயிரும் ஒன்றிட்டு அத்துவிதமாய் நின்றபோது இருவரது நிலையும் இரண்டு. உவமைகள் வழி ஈண்டு விளக்கப்படுகின்றன. அண்ணாமலையான் திருவடி களைச் சென்று தொழும் விண்ணோர் தம் முடியின் மணி யொளி வீறு அற்றாற் போலவும், கதிரவன் ஒளி வானிடைப் பரவலும் ஒளி மழுங்கிய தாரகை . கூட்டத்தின் தன்மை போலவும் என உவமைகள் இரண்டு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இறைவனது திருமுடியை அன்னப்பறவை உருத்தாங்கித் தேடினான் பிரமன்,