பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்டர் சி. பாலசுப்பிரமணியன் 93

அடியைத் தேடப் பன்றியுரு தாங்கிச் சென்றார் திருமால். அப்போது சிவன் இவர்கள் இருவரும் காணவொண்ணா நிலையில் அழற்பிழம்பாகக் காட்சி தந்தான். எனவே அண்ணலின் அடித்தாமரை மலர்கள் பேரொளிப் பிழம் பாகத் திகழும் தன்மையுடைத் தாகும். திருநாவுக்கரசர் பெருமானும் தம் திருவையாற்றுத் திருவிருத்தப் பாட்டில் (17)

சோதியும் செஞ் சுடர் ஞாயிறும் ஒப்பன தூமதியோடு

என்று குறிப்பிடுவர். கண்டராதித்த தேவர் என்னும் சோழர் குலத்துதித்த ஞான வள்ளலும்,

நெடியானோடு நான்முகனும் வானவரும் நெருங்கி முடியான் முடிகள் மோதியுக்க முழுமணியின்திரளை அடியார் அலகினால் திரட்டும் மணி தில்லையம்

பலத்துக்கு அடியார் கொன்றை மாலையானைக் காண்பதும்

என்று கொலோ

என்று தேவர்கள் தங்கள் மணி மகுடத்துடன் சென்று திருவருள் பெறச் சிவபெருமானைத் தரிசித்த பான்மை யினைத் திருவிசைப் பாவினில் விளக்குவர்.

மேற்காட்டப் பெற்ற இரண்டு உவமைகளும் இறைவனும் உயிரும் முத்தி நிலையில் ஒன்றாகாமல் இரண்டாகாமல் ஒன்றும் இரண்டும் ஆகாமல் கலந்து நிற்கும் பெற்றியினை அறிவித்தனவாகும்.

இவ்வாறு அத்துவிதமாய் நின்ற சிவன், அறிவுப் பொருள், அறிவில் பொருள்களோடும் கலப்பினால் பேதமற்றும், பொருட்டன்மையால் பேதமாயும், உயிர்க் குயிராதல் தன்மையால் பேதா பேதமாயும் விளங்கு கின்றான் என்பார். பெண்ணாகி, ஆணாய், அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும்