பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 திருவெம்பாவை விளக்கம்

வேறாகிக் கண்ணார் அமுதமாய் நின்றான் என்றார். பெண்ணாகி ஆனாய் அலியாய் என்பது உயர்தினை

அறிவுப் பொருள்களைக் குறித்து நின்றது. பெண் ஆண் அலியெனும் பெற்றியன் காண்க’’ என்று திருவாசகத் திருவண்டப் பகுதியானும் மணிவாசகர் இ த ைன உணர்த்துவர். அறிவில் பொருள்களைக் குறிக்க

  • விண்ணாகி மண்ணாகி’ என விளம்பினார். ஐம்பூதங் களின் முதலாக உள்ள விண்ணையும் இறுதியாக உள்ள மண்ணையும் குறிப்பிட்ட வகையினால் இடைப்பட்ட நீர், நெருப்பு, காற்று ஆகிய மூன்றனையும் உடன் குறிப்பிட்டவாறாம். ஆகாயம், கதிரவன், மதி, கனக் கிலாத நட்சத்திரங்களை உடைமை காரணம் பற்றிப் * பிறங்கொளிசேர் விண்’ எனப்பட்டது.

இரு கிலனாய்த் தீயாகி நீருமாகி

இயமானனாய் எரியும் காற்றுமாகி அருகிலைய திங்களாய் ஞாயிறாகி

ஆகாசமாய் அட்டமூர்த்தி யாகிப் பெருகலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்

பிறருருவும் தம்முருவும் தாமேயாகி , நெருங்லையாய் இன்றாகி நாளையாகி

கிமிர் புன் சடையடிகள் கின்றவாறே என்னும் திருத்தாண்டகமும் இக்கருத்தை வவியுறுத்தல் காணலாம் .

சிவனைக் கண்ணார் அமுதம் எனச் சொல்லியிருத்தல் கருதற்பாற்று.

‘பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடு என்னும் தொடர், நீராடப் போந்த கன்னியர்கள் புலர்காலைப் போது வரை நீராடினார்கள் என்னும் குறிப்பினைத் தருவதாகும்.

திருவெம்பாவை திருவண்ணாமலையில் மாணிக்க வாசகப் பெருமானால் இயற்றப்பட்டது என்பதற்கு ‘அண்ணாமலையான்’ என்றது ஒரு குறிப்பென்பர்.