பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 95.

கடல் வண்ணனும் வேதக்கிளர் தாமரை மலர்

மேலுறை கேடில் புகழோனும் அளவாவணம் அழலாகிய அண்ணாமலை

என்று திருஞானசம்பந்தரும் தம் தேவாரப் பதிகத்தில் (105) குறிப்பிட்டிருப்பது புராணக்கதையை உள்ளடக்கிய தாகும்.

அண்ணா மலையான்

அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின்

மணித்தொகைவீ றற்றாற்போல் கண்ணார் இரவி

கதிர் வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித்

தாரகைகள் தாமகலப் பெண்ணாகி ஆணாய்

அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி

இத்தனையும் வேறாகிக் கண்ணார் அமுதமுமாய்

கின்றான் கழல்பாடிப் பெண்ணே!இப் பூம்புனல்பாய்ந்(து)

ஆடேலோர் எம்பாவாய்!