பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்

உங்கையிற் பிள்ளை

உனக்கே அடைக்கலம் என்(று) அங்கப் பழஞ்சொற்

புதுக்கும் எம் அச்சத்தால் எங்கள் பெருமான்!

உனக்கொன் றுரைப்போங்கேள்! எங்கொங்கை கின்அன்பர்

அல்லார்தோள் சேரற்க; எங்கை உனக்கல்லாது

எப்பணியுஞ் செய்யற்க; கங்குல் பகல் எங்கண்

மற்றொன்றுங் காணற்க! இங்கிப் பரிசே

எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயிறு(று)?

எமக்குஏலோர் எம்பாவாய்!

இறைனது அத்துவித நிலையை அறிவுறுத்திய மணிவாசகப் பெருந்தகையார் உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்ற இச்சிறந்த திருப்பாட்டில், உலக உயிர்கள் தம்மையெல்லாம் சிவபெருமானிடத்து அடைக்கலப் பொருளாக ஒப்புவித்த பின்னர் அவைகட்கு யாதொரு செயலுமின்றி, சிவன்மாட்டு வருபயன்களை