பக்கம்:திருவெம்பாவை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெம்பாவையும் திருப்பாவையும் 99

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ? எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம்' என்று சொன்ன வள், "நீயே வந்து எண்ணிக் கொள்” (4) என்பது திருவெம் பாவை, எல்லாரும் போந்தாரோ, போந்தார், போந்து எண்ணிக்கொள்’ (15) என்பது திருப்பாவை. ஒரு பெண்ணை, 'ஏலக் குழவி' (5) என்று திருவெம்பாவை சொல்ல, கந்தம் கமழும் குழலி (18) என்ற விளி திருப்பாவையில் வரப் பார்க்கிருேம்.

விடியற்காலையில் கோழி கூவுவதை, கோழி சிலம்பு' (8) என்று திருவெம்பாவையிற் காண்பதை, "வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்' (11) என்று திருப்பாவையிலும் காண்கிருேம். திருவெம்பாவை அம்பிகையை, 'மையார் தடங்கண்' (11) என்று படர்க்கையில் சொல்வதை, திருப்பாவை ஒரு பெண்ணே முன்னிலைப் படுத்தி, மைத் தடங் கண்ணினாய்’ (19) என்று விளியாக்கிச் சொல்கிறது. திருவெம்பாவை சிவபெருமர்னே, "நந்தம்மை ஆளுடை யாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான்’ (10) என்று சொல்ல, திருப்பாவை ஒரு பெண்ணை, நீயுன் மளுளன. எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்’ (19) என்கிறது. திருவெம்பாவை அம்பிகையின் இடையை, எந்தம்மை ஆளுடையாள் இட்டிடை’ (10) என்பதையே, திருப்பாவை, சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்’(20)என்று நப்பின்னையை கூறுகிறது. போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் (20) என்பது திருவெம்பாவை; "உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே (21) என்பது திருப்பாவை.

திருவெம்பாவை இறுதிப்பாட்டில் ஒவ்வோரடியிலும் முதலில், "போற்றி” என்ற சொல் வருகிறது, "போற்றி யருளுகநின் ஆதியாம் பாத மலர்' என்பது முதலாக. திருப்பாவை போற்றியை ஒவ்வோரடியிலும் இறுதியில் வைத்து, அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி” (29) என வருகிறது. ஒழிக்க ஒழியா அன்பைத் திருவெம்பாவை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/100&oldid=579293" இலிருந்து மீள்விக்கப்பட்டது