பக்கம்:திருவெம்பாவை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 . திருவெம்பாவை

விடியற் காலையை வருணிக்கும் போது, கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும், ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்’ (8) என்று திருவெம்பாவையில் வரும் குருகுகளும் சங்கும் திருப்பாவையில், புள்ளும் சிலம்பின காண்; புள்ளரையன் கோயில், வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ' (6), 'புள்ளும் சிலம்பின காண்’ (13) என்பவற்றில் வந்துள்ளன. சங்கிடுவான் போத் தந்தார்’ (19)என்பது திருப்பாவை. பெண்ணை.'பிள்ளை' (19) என்று திருவெம்பாவை சொல்லும் வழக்கை, 'பிள்ளாய் எழுந்திராய்” (6) என்று திருப்பாவையிலும் பார்க்கிருேம். 'யாம் பாடக் கேட்டேயும். வளருதியோ... ஏதேனும் ஆகாள் கிடந்தாள்’ (1) என்று திருவெம்பாவை சொல்ல, 'கேசவனப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ’’ (7), 'பள்ளிக் கிடத்தியோ (13) என்று திருப்பாவை கூறுகிறது. வன்செவியோ நின்செவிதான்?: (1) என்று திருவெம் பாவைப் பெண் கேட்க, ஊமையோ அன்றிச் செவிடோ?' ' (9) என்று திருப்பாவைப் பெண் வினவு கிருள்.

"மானே. நீ நென்னலை நாளை வந்து உங்களை, நானே எழுப்புவன்’ (6) என்ருளாம் திருவெம்பாவைக் கன்னிப் பெண் திருப்பாவை அதனையே, எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்' (14) என்கிறது. அவ்வாறு சொன்ன வள் இப்போது நாணம் இனறிப் படுத்திருப்பதை, 'நானே எழுப்புவன் என்றலும் நாணு மே, போன திசைபகராய் (6) என்று திருவெம்பாவையில் காண்பதையே, ' எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந் திராய், காணுதாய், நாவுடையாய்' (14) என்பதிலும் காண்கிருேம். பெண்களை, வண்ணக் கிளிமொழியார்' (4) என்று திரு வெம்பாவை படர்க்கையில் வைத்துச்சொல்ல. திருப்பாவை ஒரு பெண்ணை முன்னிலைப்படுத்தி, "எல்லே இளங்கிளியே' (15) என்கிறது. "இன்னம் துயிலுதியோ?” (7) என்று திருவெம்பாவையில் வரும் வின. திருப்பாவையிலும், "இன்னம் உறங்குதியோ’’ (15) என்ற உருவில் வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/99&oldid=579292" இலிருந்து மீள்விக்கப்பட்டது