பக்கம்:திருவெம்பாவை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெம்பாவையும் திருப்பாவையும் 97

பாய்ந்து ஆடேலோ ரெம்பாவாய்ட் (15) என்றும், "பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்” (17) என்றும், பூம்புனல் பாய்ந்து ஆடேலோ ரெம்பாவாய்' (18) என்றும் திருவெம்பாவையில் வருகின்றன.

திருப்பாவையில் முதற்பாட்டிலேயே, "நீராடப் போதுவீர் போதுமினே" என்றும், நாட்காலே நீராடி’ (2) என்றும், நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர்

ஆடினுல்” (3) என்றும், நாங்களும் மார்கழி நீராட' (4) என்றும், "குள்ளக் குளிரக் குளிர்ந்து நீர் ஆடாதே’ (13) என்றும், இப்போதே எம்மை நீர் ஆட்டேலோ ரெம் பாவாய்' (20) என்றும், மார்கழி நீராடுவான் மேலேயார் செய்வனகள்' (26) என்றும் வருகின்றன. ... -

திருவெம்பாவையில், என்னே துயிலின் பரிசு’’ (7) என்றும், வாழி ஈதென்ன உறக்கமோ (9) என்றும், வருகின்றன. திருப்பாவையில், ஈதென்ன பேருறக்கம்?" (12) என்று வருகிறது. ஏதேனும் ஆகாள் கிடந்நாள்' (1) என்று திருவெம்பாவை சொல்ல, திருப்பாவை, பள்ளிக் கிடத்தியோ?" (12) என்கிறது. உய்வார்கள் உய்யும் வகை யெல்லாம் உய்ந்தொழிந்தோம்'(11)என்று திருவெம்பாவை யில் வர, உய்யுமா றெண்ணிஉகந்தேலோரெம்பாவாய்’(2) எனத் திருப்பாவையில் வருகிறது. "நேரிழையிர் (1) என்று திருவெம்பாவை பாடும் பெண் விளிப்பது போலவே திருப் பாவை பாடும் பெண்ணும். 'நீராடப் போதுவீர் போதுமினே, நேரிழையீர்’ (1) என்று விளிக்கிருள். -

திருவெம்பாவையில், "உன் சீர் அடியோம்' (9) என்று வர, சீர்மேவும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்கள் (1) என்று திருப்பாவையில் சீர் உடையார் வருகிருர்கள். "இன்னருளே என்னம் பொழியாய் மழை’ (10) என்று திருவெம்பாவை கூற, "தீங்கின்றி நாடெங்கும் மும்மாரி. பெய்யும் (3) என்றும், 'வாழ உலகினில் பெய்திடாய்' (4) என்றும் திருப்பாவை சொல்கிறது. . . . . .

தி.-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/98&oldid=579291" இலிருந்து மீள்விக்கப்பட்டது