பக்கம்:திருவெம்பாவை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெம்பாவையும் திருப்பாவையும்

திருவெம்பாவை இருபது பாடல்களால் ஆகியது. திருப்பள்ளி யெழுச்சி யென்று தனியே மாணிக்கவாசகர் பாடியிருக்கிரு.ர். திருப்பாவையில் முதலில் பெண்களே நீராட அழைத்துப் பிறகு வாயில் காப்பான் முதல் பெருமாள் வரையில் எழுப்பும் வகையில் பாடல்கள் உள்ளன. தொண்டரடிப் பொடி ஆழ்வார் தனியே திருப்பள்ளி எழுச்சி என்று வேறு பாடியிருக்கிரு.ர். திருவெம் பாவையின் இறுதியில், மார்கழி நீராடுவோம் எம்பாவாய்' என்று வருகிறது. திருப்பாவையில் முதலிலேயே, 'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்ளைால்’ என்று தொடங்குகிறது.

கோதை நாய்ச்சியாரின் திருநாமமாகிய ஆண்டாள் என்பதன் முதலெழுத்தாகிய ஆவை வைத்து, 'ஆதியும் அந்தமும் என்று தொடங்குகிறது திருவெம்பாவை, மாணிக்கவாசகர் திருநாமத்தின் முதல் எழுத்தாகியை மாவை வைத்து. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னளால்’’ என்று தொடங்குவதோடு, மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்” (4) என்று திருப்பாவை கூறுகிறது. . . . . . . . . . .

நீராடப் போதுவீர் போதுமினே' என்றும், "நாட் காலே நீராடி (2) என்றும், நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினுல்' (3) என்றும், "நாங்களும் மார்கழி நீராடுவோம்' என்றும் திருப்பாவையில் வருகின்றன. :மொய்யார் தடம் பொய்கை புக்கு (10) என்றும், "இருஞ் சுனைநீராடேலோ ரெம்பாவாய் (12) என்றும், பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோரெம் பாவாய் (13) என்றும், "சீதப் புனவாடி' (14) என்றும், "ஏருருவப் பூம்புனல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/97&oldid=579290" இலிருந்து மீள்விக்கப்பட்டது