பக்கம்:திருவெம்பாவை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பால் ஊறு தேன்வாய்ப் படிறீ!

பெண்களின் தலைவி பெண்களின் கூட்டத்தோடு வேறு ஒர் பெண் வீட்டிற்குப் போ கிருள். அவள் படுத்துக் கொண் டிருக்கிாள். அவளைப் பார்த்துத் தலைவி பேசுகிருள். * திருமாலால் அறியாதவரும், நான்முகளுல் காண முடியாதவரும், மலை போன்றவருமான எம்பெருமானை நாம் அறிவோம் என்று பொய்களைப் பேசும் வாயையுடைய வஞ்சகப் பெண்ணே, பால் ஊறுகின்ற தேனையுடைய பெண்ணே, உன் வாயிற்கடையைத் திறப்பாயாக.’’

மால்அறியா நான் முகனும் காணு மலையினைநாம் போல் அறிவோம் என்றுஉள்ள பொக்கங்க ளேபேசும் பால்ஊறு தேன்வாய்ப் படிமீ. கடைதிறவாய்.

'மால் அறியா, நான்முகனும் காணு மலை" என்று சொன்ன அளவில் அவள் வாயில் பாலும், தேனும் ஊறியதுபோல வந்தவர்கள் எண்ணிஞர்கள். ஆனல் 'நாம் போலும் அறிவோம்’ என்று சொன்னவுடன் அவளை வஞ்சகம் உடையாள் என்று உணர்ந்தார்கள். -

"நாங்கள் உங்கள் வாயிலில் வந்து இறைவனுடைய பெருமையைப் பாடுகிருேம். அவனே இந்த உலகத்தில் உள்ளோராலும், தேவலோகத்தில் உள்ளோராலும், வேறு எந்தப் பொருளாலும் அறிவதற்கு அரியவன். அவன் நம்முடைய அன்புக்கு ஆட்பட்டுத் தன்னுடைய கோலத் தைக் காட்டி நம்மை ஆட்கொண்டவன். நம்மைக் கோதாட்டி அன்பு செய்தான். அவனது அருளை நினைந்து நாம் பாடுகிருேம், சிவனே, சிவனே என்று ஓலமிடுகிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/23&oldid=579216" இலிருந்து மீள்விக்கப்பட்டது