பக்கம்:திருவெம்பாவை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருவெம்பாவை

தானே வந்து எம்மைத் தலையளித்து.ஆட் கொண்டருளும் வான்வார் கமல்பாடி வந்தோர்க்குஉன் வாய் திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும் ஏஞேர்க்கும் தம்கோனைப் பாடுஏலோர் எம்பாவாய்.

"மான் போன்ற பெண்ணே, நீ நேற்று நாளே வந்து உங்களை நானே முன்னலே வந்து எழுப்புவேன் என்றும் பிறவாறும் சொன்னவை நாணம் இல்லாமல் இன்று போன திசை எது? அதைச் சொல்வாயாக. உனக்கு இன்னும் விடிய வில்லையோ? தேவலோகமும், பூலோகமும் பிற உலகங்களும் அறிவதற்கு அரியவனகிய சிவபெருமான் நம்முடைய முயற்சியின்றியே தன்னுடைய பேரருளால், தானே வந்து ஒன்றுக்கும் பற்ருத எம்மைச் சிறந்த அருள் பூண்டு ஆட் கொண்டு அருளினன். அவனுடைய பெருமை பொருந்திய நீண்ட திருவடிகளைப் பாடி நாங்கள் வந்திருக்கிருேம்: எங்களுக்கு உன் வாயிலைத் திறப்பாயாக துள்ளித் துள்ளிக் குதித்து எழுபவள் ஆதவின் மானே’ என்று அழைக்கிருள். தென்னல்-நேற்று. நானே வந்து எழுப்புவன் என்றது. நீங்கள் வந்து எழுப்பும்வரை படுத்திராமல், நாளே முதலில் எழுந்திருந்து உங்களை முதலில் வந்து எழுப்புகிறேன் என்ற படி, நானே-ஏகாரம், பிரிநிலை. இப்படிநேற்றுச் சொன்ன வள் இன்று படுத்திருக்கிருயே, உனக்கு நாணம் இல்லையா? இயல்பாக நாணம் உள்ளவளாயிற்றே. அந்த நாணம் இப்போது எங்கே போயிற்று?' என்று கேட்கிருள். இன்னம் புலர்ந்தின்ருே என்றது, உலகம் எல்லாம் விடிந்துவிட்டது. அவரவர்கள் தங்கள் செயல்களைச் செய்கிருர்கள். உனக்கு மாத்திரம் இன்னும் விடியவில்லையோ? என்றபடி வானே, நிலனே, பிறவே என்பவற்றிலுள்ள ஏகாரங்கள் எண் ஏகாரம். இறைவன் தேவலோகத்தில் உள்ளவர்களாலும்' பூலோகத்தில் உள்ளவர்களாலும், மற்ற உலகத்தில் உள்ள வர்களாலும் அறிவதற்கு அறியவன். அத்தகைய பெருமான் நம்மிடத்திலுள்ள பெரும் கருணையில்ை, நம்மால் அவனே அடைய முடியாது என்பதைத் தெரிந்துகொண்டு, தானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/33&oldid=579226" இலிருந்து மீள்விக்கப்பட்டது