பக்கம்:திருவெம்பாவை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னும் துயிலுதியோ? 33

எழுந்தருளி வந்து நம்மை ஆட்கொண்டான். அவன் செய்த அன்பு மிகச் சிறந்த அன்பு. தலையளி. அத்தகைய தலையளி யைச் செய்து நம்மை ஆட்கொண்டு அருளினவன் அவன். அவன் கழல் மிகப்பெருமை உடையது. மிக நீண்டது; வான் வார் கழல். அவற்றைப் பாடி நாங்கள் வந்திருக்கிருேம்: நீயும் எங்களுடன் வரவேண்டும். அப்படி இல்லாமல் படுத் திருக்கிருயே. இப்போதாவது உன் வாசலைத் திறப்பாயாக." வான் வார் கழல்- என்பதற்கு தேவலோகத்தில் நடந்த திருவடி என்றும் பொருள் கொள்ளலாம். "இறைவனுடைய திருநாமத்தைக் கேட்டால் அன்பர்களுடைய உள்ளமும், உடலும் உருகும். ஆனல் நீயோ உருகாமல் இருக்கிருய். இறைவனிடத்தில் அன்பு உடைய உனக்கு இது தகுமா ?” என்று கேட்கிருள். உனக்கே உறும் என்பதில் உறும், காகுஸ் வரம். உறுமா என்பது பொருள். அவன் எங்களுக்கு மாத்திரமா தலைவன்? உனக்கும் உன்னைப் போன்ற பிறருக் கும் தலைவன் அல்லவா? அவரேப் பாட வேண்டாமா? வந்து பாடு' என்று சொல்கிருள்.

- இந்தப் பாடலால் தங்களைப் போல அவளும் வந்து தங்களோடு சேர்ந்து இறைவன் புகழைப் பாடவேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துகிருள். "...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/34&oldid=579227" இலிருந்து மீள்விக்கப்பட்டது