பக்கம்:திருவெம்பாவை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வாளா கிடத்தியால்

'தாய் போன்ற பெண்ணே. எங்களுக்கு எல்லாம் வழி காட்டி போன்றவள் அல்லவா நீ! நீ இப்படி இருக்கலாமா? உன் செயல்களுள் இவ்வாறு சோம்பி இருப்பதும் சிலவோ? நாங்கள் இறைவன் பெருமையைச் சொல்லிப் பேசுகிருேம். பல தேவர்களும் நினைப்பதற்குக் கூட அரியவன் ஆகிய ஒப்பற்ற ஒருவன், பெரும் புகழை உடையவன், திருச்சின்னங் கள் கேட்டால் சிவனே என்று வாய் திறந்து முன்னெல்லாம் முழங்குவாயே! பாடுவதற்கு முன்னல் தென்ன என்று சொல்வதற்கு முன்பு தீயிலிட்ட மெழுகு போல உருகிப் போவாயே. இப்போது எப்படி இருக்கிருய்? நாங்கள் எல்லாம் சேர்ந்து என் ஆன போன்றவன். என் தலைவன். என் இன்னமுதன்' என்று எல்லோரும் சேர்ந்து சொன்னுேம், வெவ்வேருகவும் சொல்கிருேம். அப்படி இருந்தும் இன்னும் உறங்குகிருயே! உன்னுடைய நெஞ்சில் அன்பு இல்லையா? வன் நெஞ்சமும். பேதைமையும் உடைய வர்களைப்போல ஒன்றும் செய்யாமல் படுத்துக் கிடக்கிருயே! உன்ளேச் சொல்லிக் குற்றம் இல்லை. உன்னை ஆட்கொண் டிருக்கிற துளக்கத்தின் நிலை அது. துரக்கத்தின் தன்மைதான் என்னே, ஆச்சரியம்’ என்கிருள்.

தம்மைவிடச் சிறந்தவளாகவும் வழிகாட்டியாகவும் இருந்ததால், • -

- - - அன்னே என்று விளிக்கிருள்.

இவையும் சிலவோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/35&oldid=579228" இலிருந்து மீள்விக்கப்பட்டது