பக்கம்:திருவெம்பாவை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 திருவெம்பாவை

கின்றன. புறத்திலே இத்தகைய ஒலிகள் ஒலிக்க இங்கே நின் வாயிலில் வந்து நாங்கள் நின்று ஒப்பற்ற பரஞ்சோதியாகிய இறைவனுடைய ஒப்பற்ற மேலான கருணையையும் ஒப்பற்ற மேலான அவனைச் சார்ந்த பொருள்களையும் பாடினேமே! நீ அவற்றைக் கேட்கவில்லையா? நீ வாழ்வாயாக! இப்படி உன்னை அழுத்தி வைக்கும் இது என்ன தூக்கமோ, தெரிய வில்லையே! நீ உன் வாயிலைத் திறப்பாயாக. ஆக்ஞா சக்கரத்தையுடைய சிவபெருமானிடத் கில் உனக்குள்ள அன்புடைமை ஆகும் வண்ணம் இவ்வண்ணந்தானு? யுகங் களுக்கெல்லாம் முன்னே இருப்பவகை நிற்கும் ஒப்பற்ற சிவ பெருமான, ஏழைபங்காளன. நீ எழுந்து வந்து பாடுவாயாக."

விடியற் காலத்தே கூவும் கோழிகள் கூவின. பறவைகள் கூடு விட்டுச் சிறகடித்துப் புறப்படுவதற்கு ஒலிக்கின்றன. அதல்ை.

கோழி சிலம்பச் சிலம்பும் குருகுளங்கும்’

என்கிருள் . சிலம்ப-ஒலிக்க. குருகு-பறவை.

ஏழு சுவரங்களையுடைய வாத்தியத்தை ஏழில் என்ருள். சுரங்கள் ஏழுக்கு இருப்பிடமான இசைக் கருவி என்று பொருள் கொள்க. ஏழில் என்பதோர் பறவை என்பாரும் உளர். விடியற்காலையில் சங்கூதுதல் வழக்காதலின்,

'இயம்பும்வெண் சங்கெங்கும்"

என் ருள். .

புறத்தே ஒலிக்கும் ஒலிகளைக் கேட்டாலே எழுந்து விடலாம். நீ எழவில்லை. இப்போது நாங்கள் உன் நாதாங்கி

யைப் பிடித்துக் கொண்டு பாடுகிருேமே! ஒப்பற்ற பரஞ் சோதியாகிய இறைவனுடைய மேலான கருணையையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/43&oldid=579236" இலிருந்து மீள்விக்கப்பட்டது