பக்கம்:திருவெம்பாவை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன் அடியார் எம் கணவர் ஆவார் - 47

இறைவன் இருக்கிருன் என்ற கருத்தை இவ்வாறு சொன் னர். "என்றைக்கும் நித்தியணுக உள்ள உன்னை எங்களுடைய தலைவனுகப் பெற்ற பெருமை எங்களுக்கு உண்டு. இதைவிடப் பெரிய சிறப்பு வேறு இல்லை. ஆகையால் நாங்கள் எல்லாம் உன் சிறப்புடைய அடியார்கள்.”

உன்னைப் பிரானகப் பெற்றஉன் சீரடியோம்.

"எங்களுடைய அடிமைத்தனம் உன்னேடுநிற்பது இல்லை. உன்னுடைய அடியார்களுக்கும் நாங்கள் பணி செய்வோம். அவர்கள் செய்கின்ற பணிகள் எல்லாம் உன்னே டு தொடர் புடையனவாக இருக்கும்; ஆதலின் அவர்கள் தொடர்பால் எங்கள் பக்திக்குச் சிறிதும் குறைவு வராது. ஆகவே, அவர் களுக்கு எவை எவை பக்குவமான பொருள்களோ அவற்றை எல்லாம் நாங்கள் செய்து கொடுப்போம். அன்னவரே எங்கள் கணவர்கள் ஆவார்கள். அன்னவரே என்பதிலுள்ள ஏகாரம் பிரிநிலை ஏகாரம். உலகத்திலுள்ள செல்வர்களுக்குப் பிரியமாக நடந்துகொண்டு அவர்களுடைய தயவைப் பெறு கிறவர்களே பெரும்பாவோர். அப்படி இல்லாமல் நாங்கள் உன்னுடைய அடியார்களுக்கே பாங்காவோம்’ என்பதை இந்த ஏகாரம் குறிக்கிறது. அவ்வளவு சிறப்புடைய பெரிய வர்களோடு பக்குவமாகப் பழகியதால் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே தொடர்பு இறுக்கமாகும். அவர்கள் எங்களையே மணந்துகொள்வார்கள. நாங்களும் அவர்களே நன்ருக உணர்ந்துகொண்டவர்கள். ஆதலினல் எங்கள் வாழ்க்கைத் துணைவராக வேறு யாரையும் கருதாமல் அவர் களேயே எங்கள் கணவராக ஆக்கிக்கொள்வோம். அவர் மனமுவந்து எங்களே ஏற்றுக் கொள்வார்கள்.”

அன்னவரே எம்கண்வர் ஆவார்; அவர்உகந்து

சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்.

“கணவருடைய மனம்போல நடப்பது உண்மையான பத்தினிமாருக்கு அழகு அவர்கள் உன் அடியார்கள் ஆதலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/48&oldid=579241" இலிருந்து மீள்விக்கப்பட்டது