பக்கம்:திருவெம்பாவை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 திருவெம்பாவை

அவர்கள் சொல்வன எல்லாம் உன் தொழும்போடு.தொடர் புடையவனவாக இருக்கும். அந்தப் பணிகளை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியோடு செய்வோம். இத்தகைய நிலை எங்களுக்கு வந்துவிட்டால் வேறு என்ன வேண்டும்? இந்த நிலையைத் தருவதற்கு எங்களுடைய தலைவனுகிய உன்னை அல்லாமல் வேறு யார் இருக்கிருர்கள்? அந்த வகையில் எங்களுக்கு எங்களுடைய கோன் ஆகிய நீ அருள்புரிய வேண்டும். இவ்வாறு நீ செய்தால் நாங்கள் எந்த விதமான குறையும் இல்லாமல் இருப்போம். உலகிலுள்ள பொருள் களால் உண்டாகின்ற இன்பத்தைவிட உன்னுடைய திருவருளால் உண்டாகிற இன்பம் மிகப் பெரியது, அதன. இந்த உலகத்தில் பெற்றுவிடுவோமானல் எங்களுக்கு வேறு என்ன குறை இருக்கப் போகிறது? நாங்கள் பரிபூரண ஆனந்தத்தைப் பெறுவோம்."

முன்னைப் பழம்பொருட்கும் முன்னேப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே உன்னைப் பிரானகப் பெற்ற உன்சீரடியோம் உன்அடியார் தாள்பணிவோம்.ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்.கணவர் ஆவார் அவர்உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்குஎம்கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோம்ஏலோர் எம்பாவாய்

இதல்ை ஆண்டவனுடைய அடியார்கள் தொடர்பு தங்களுக்கு வேண்டுமென்று சொல்கிருர்கள். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/49&oldid=579242" இலிருந்து மீள்விக்கப்பட்டது