பக்கம்:திருவெம்பாவை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

šé; திருவெம்பாவை

மையார் தடங்கண் மடந்தை மணவாளா

恩山下,端 ஆட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகைஎல்லாம் உய்ந்தொழிந்தோம்: எய்யாமல் காப்பாய் எமை; ஏலோ ரெம்பாவாய்!

|வண்டுகள் மொய்க்கின்ற நீர் நிரம்பிய விசாலமான பொய்கையிலே குதித்து மகேர் என்ற ஒலி எழும்ப, கை யினுல் நீரை அள்ளி அள்ளி வீசி, உன் திருவடியைப் பாடி, ஐயனே. பரம்பரை பரம்பரையாக உன் அடியோமாக இருக்கும் நாங்கள் உய்தியை அடைந்தோம் நிரம்பிய தீயைப் போலச் சிவந்த திருமேனியை உடையவனே, வெண்மையாகிய திருநீற்ருல் அபிடேகம் கொள்பவனே, அருள் என்னும் செல்வத்தை உடையவனே, சிறிய இடையை யும் மையையுடைய விசாலமான கண்ணேயுமுடைய உமா தேவியாரின் கணவனே, எம் தலைவனே, நீ தொண்டர்களைப் பல வகையில் ஆட்கொண்டருள் கிருய். அவர்கள் பல்வேறு வகையில் நற்பேறு பெறுகிருள்கள் அவ்வாறு உய்யும் வகை யெல்லாம் நாங்களும் உய்ந்துவிட்டோம். இனி எம்மைச் ச்ோர்வடையாமல் கைவிடாமல் பாதுகாப்பாயாக.1

மொய்-வண்டு மொய்க்கின்ற, தடம் பொய்கைவிசாலமான நீர் நிலை: பொய்கை-மனிதர் ஆக்காத நீர் நிலை என்று. பொருள் எழுதுவார் நச்சினர்க்கினியர். அவர்கள் கன்னிப்பெண்களாதலின் பொய்கையில் குதிக் கிருர்கள். அதனல் முகேர் என்ற ஒலி எழும்புகிறது. அப்படிக் குதித்துக் கையில்ை தண் ணிரை அள்ளி ஒருவர் மேல் ஒருவர் வீசிக் கொள்கிருர்கள். அதனல், 'பொய்கை புக்கு முகேர் என்னக் கையர்ல் குடைந்து குடைந்து, என்கிரு.ர்கள். குடைதலாவது கை நிறைய அள்ளி வீசுதல். உள்ளே முழுகி விழுதலுமாம். அவ்வாறு மூழ்கும் போது இறைவனுடைய திருவடியைப் பாடிக்கொண்டே மூழ்கு கிருர்கள். உன் கழல்பாடி என்கிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/57&oldid=579250" இலிருந்து மீள்விக்கப்பட்டது