பக்கம்:திருவெம்பாவை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எய்யாமற் காப்பாய் 57

ஐயன்-தலைவன், வழி அடியோம் என்பது, "உன்னைப் பாடுவதும் புகழ்வதும் நாங்கள் புதியனவாகக் கற்றுக் கொள்ளவில்லை. பரம்பரை பரம்பரையாக எங்கள் முன்னேர் காலத்திலிருந்து வந்த வழக்கம் இது. நாங்கள் மறந்தாலும் இந்த வழக்கம் எங்களை விடாது’ என்றபடி, இவ்வாறு செய்வதல்ை நாங்கள் உண்மையான வாழ்வை வாழ்ந்தோம். உன்னே மறந்த வாழ்வது வாழ்வன்று. காண். அசை, இதை நீயே தெளிவாயாக எனலும் ஆம்.

இறைவன் செம்மேனியன். நிரம்பிய அழலைப் போல ஒளி யும் செம்மையும் உடையவன தலின், 'ஆரழல்போல்செய்யா' என்ருள். நீருடி என்பதற்கு நீறு பூசுகிறவன், திருநீற்றபி டேகம் கொள்பவனென்றும் பொருள் கொள்ளலாம். பெண் களுக்கு இடை சிறுத்தல் அழகாதலின், சிறு மருங்குல்' என்ருள். மை இடுவது சுமங்கலிக்கு அடையாளம். அம்பிகை நித்திய சுமங்கவியாதலின் எப்போதும் மை யிட்டிருப்பவள். மைந் நின்ற ஒண்கண்' என்று கூறுவது காண்க. தடங்கண்-விசாலமான கண் விசாலாட்சி. தன் அன்பர்கள் பலருக்கும் கருணை வெள்ளம் பரப்பத்தக்க லிசாலமான கண், மடந்தை என்றது பருவத்தைக் குறியாமல் பெண் என்னும் துணையாய் நின்றது. அம்பிகையை ஆண்டவன் இமய அரசன் தர மணந்துகொண்டான். என்றும் தன்னுடன் பிரியாமல் இருப்பவளாயினும் இப்படி ஒரு திருவிளையாடல் புரிந்தான். மீனட்சி திருமணமும் அத்தகையதே. ஆதலின், 'மையார் தடங்கண் மணவாளா என்கிருள். கல்யாணசுந்தரமூர்த்தி என்பது இறைவன் திருக்கோலங்களில் ஒன்று. ஐயா என்று இரண்டாம் முறை யும் விளிக்கிருள். ஆதரம் மிகுந்தால் இவ்வாறு மீட்டும் மீட்டும் ஒரே விளி வரும். - - - :

ஆண்டவன் செய்வன யாவும் திருவிளையாடல்கள். அவற்ருல் அன்பர்கள் உய்வார்கள்; அல்லாதார் துன்புறு

. . . 4- اق

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/58&oldid=579251" இலிருந்து மீள்விக்கப்பட்டது