பக்கம்:திருவெம்பாவை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. சுனைநீர் ஆடுவோம்"

நீராடும் பெண்கள் பேசிக் கொள்கிரு.ர்கள். சுனைநீரில் ஆடுகிருர்கள். நம்மைப் பிறவியென்னும் துயரம் பிணித் திருக்கிறது. அது கெட வேண்டும். அதற்கு வேறு யாரிடம் சென்று வேண்டுவது? அந்தத் துயரம் போக வேண்டுமானுல் ஒருவனுல்தான் முடியும். அவன்தான் ஆரவாரத்தோடு பாடி நடனமிட்டுக்கொண் டாடும் புனிதன்.' -

ஆர்த்த பிறவித் துயர்கெடகாம் ஆர்த்துஆடும்

தீர்த்தன், . - • . . . .

'அவன் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்கள் பல.அவற்றில் எல்லாம் சிறந்தது நன்மைகள் யாவும் பொருந்திய தில்லை. அங்கே உள்ள திருச்சிற்றம்பலத்தில் தீயில் நின்று நடனம் செய்யும் பெருமான் அவன்.” . . . .” .

- நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீஆடும் கூத்தன்.

எல்லா வகையினும் சிறந்த தீயைப் போன்ற அந்தப் பெருமான் அதில் உவந்து கூத்தாடுகிருன். பெருந் தீயைச் சிறு தீ என்ன செய்யும்? அவன் செய்யும் திருவிளை யாடல்கள் பல. இந்தத் தேவலோகத்தையும் பூவுலகையும் பாதுகாக்கிறவன், குவலயம் முழுவதையும் பாதுகாப்பவன் அவன். மன்னர்கள் காப்பது வெறும் வியாஜ மாத்திரம். உண்மையில் அவன்தான் காக்கிருன். தான் வைத்த மரத் துக்குத் தண்ணீரும் எருவும் இட்டுப் பாதுகாப்பவனக இருக் கிருன். அதனேக் காக்கிருன். சர்வப் பிரளய காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/60&oldid=579253" இலிருந்து மீள்விக்கப்பட்டது