பக்கம்:திருவெம்பாவை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 திருவெம்பாவை

அவற்றை மறைத்தும் விளையாடுகிருன். ஐங்கலப் பாரம் சுமக்கிறவனுக்கு ஒரு சிறு தரும்பைத் தூக்குவது எப்படி எளிதோ அப்படி அவன் காத்தலையும் படைத்தலேயும் கரத்தலையும் செய்து விளையாடுகிருன். அவனுடைய அன்பர் கள் அவன் செய்யும் செயல்கள் எல்லாவற்றையும் அவனுடைய திருவிளையாடல்களாகவே எண்ணிப் போற்று வார்கள். தமக்குத் துன்பம் வந்தாலும் அதுவும் அவன் தி ரு வி ளே யா ட ேல என்று எண்ணி மகிழ்வார்கள். 'இடும்பைக்கு இடும் பைப் படுப்பவர்கள் அவர்கள். "நாம் அவனுடைய புகழைப் பேசுவோம். வேறு வார்த்தைகளைப் பேசாமல் அவன் திருவிளையாட்டைப் பற்றியும் அவன் இயல்புகளைப் பற்றியும் பேசுவோம்.”

இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி,

"இவ்வாறு அவனைப் பற்றியே வார்த்தைகளைப் பேசி நம் வளைகள் ஒலிக்கவும் நீண்ட உடைகள் ஒலித்து ஒசை செய்ய வும். நம் அழகுடைய கூந்தலின் மேல் வண்டு ஒலிக்கும்படி நீராடுவோம்.' .

வளைசிலம்ப, வார்கலைகள் ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டு ஆர்ப்ப.

"தாமரை மலர்களும் பிற மலர்களும் மலர்ந்து விளங்கும் இந்தப் பொய்கையில் நாம் குள்ளக் குளிர மூழ்குவோம். நம்முடைய சுவாமியாகிய இறைவன் பொலிவு பெற்ற் திருவடிகளேத் துதித்து இந்தப் பெரிய சுனே நீரில் ஆடுவோமாக. }

ஆர்த்த பிறவித் துயர்கெடகாம் ஆர்த்து ஆடும் தீர்த்தன்.நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீஆடும் கூத்தன்.இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/61&oldid=579254" இலிருந்து மீள்விக்கப்பட்டது