பக்கம்:திருவெம்பாவை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுனைநீர் ஆடுவோம் எ

வார்த்தையும் பேசி, வளைசிலம்ப, வார்கலைகள் ஆர்ப்பரவும் செய்ய, அணிகுழல்மேல் வண்டுஆர்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேல்ஓர் எம்பாவாய்!

( 'நம்மைக் கட்டுப்படுத்திவைத்திருக்கும் பிறப்புஎன்னும் துயரம் கெடும்படியாக, ஆரவாரித்து நடனம் செய்கின்ற புனிதனும், எல்லா நன்மைகளும் உடைய தில்லையில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் தீயில் நின்று ஆடும் கூத்தனும், இந்த வானத்தையும் பூவுலகத்தையும் மற்ற உலகங்களையும் பாதுகாத்தும் அவற்றைப் படைத்தும் பிறகு மறைத்தும் விளையாடுபவனும் ஆகிய சிவபெருமானுடைய புகழாகிய வார்த்தை களையும் அவைேடு தொடர்புடையவற்றையும் பேசி, நம்முடைய அழகையுடைய கூந்தலின்மேல் வண்டு கள் மொய்த்து ஒலிக்க, பல வகையான மலர்கள் திகழும் பொய்கையில் மூழ்கி, நம்மை உடையவளுகிய சிவபெருமா லுடைய பொலிவு பெற்ற திருவடிகளைத் துதித்து இந்தப் பெரிய சுனை நீரில் ஆடுவோமாக!

"நம்முடைய செயலால் விடுபட முடியாமல் கட்டுப் படுத்தியிருத்தலால் ஆர்த்த பிறவி அந்தப் பிறவி கெட் டால் முத்தியை அடையலாம். அதன் பொருட்டு, நாம் எல்லோரும், ஆரவாரம் செய்து நடனம் செய்யும்புனிதனும் திருத்தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் தீயில் நின்று ஆடும் நடராஜப் பெருமானும், இந்தத் தேவலோகத்தையும் பூவுலகத்தையும் பாதுகாத்தும் படைத்தும் பிறகு மறைத்தும் விளையாடுபவனுமாகிய சிவபெருமானப் பற்றிய வார்த்தை களையும் அவைேடு தொடர்புடையவற்றைப் பற்றியவற்றை யும் பற்றிப் பேசி, நம்முடைய வளைகள் ஒலிக்கவும், நம் நீண்ட ஆடைகள் ஒலித்து ஓசை செய்யவும். நம்முடைய அழகு பெற்ற கூந்தலின்மேல் வண்டுகள் ஒலிக்கவும், பல வகைப் பூக்கள் திகழும் இந்தப் பொய்கையில் மூழ்கித் திளைத்து நம்மை உடையவனுடைய பொலிவு பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/62&oldid=579255" இலிருந்து மீள்விக்கப்பட்டது