பக்கம்:திருவெம்பாவை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 திருவெம்பாவை

தி ரு வ டி களை ப் புகழ்ந்து இந்தப் பெரிய சுனையில் ஆடுவோமாக.’’ - -

நம்முடைய முயற்சியால் நீக்க முடியாமல் இறைவன் அாளால் நீங்கும்படி கட்டுப்படுத்தலின் ஆர்த்த பிறவி என்ருள். நாம் வார்த்தையும் பேசி என்று கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும். ஆர்த்து ஆடும்-திருவடிச் சிலம்பு முழங் கவும் வாத்தியங்கள் ஒலிக்கவும் ஆடும். ஆர்த்துஆர்ப்ப; எச்சத்திரிபு. தீர்த்தன்-தூயவன்; தன் புகழைப் பாடுவோருடைய மாசுகளைத் தீர்த்துப் புனிதம் செய்பவன் எனலும் ஆம். நல் தில்லை என்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று நலங்களையும் பெற்ற திருத்தில்லை என்றபடி தில்லை என்பது தலம்; அங்கே உள்ளது திருச்சிற்றம்பலம். அங்கே இறைவன் தீயில் நின்று ஆடுகிருன். வானத்தைச் சுட்டிக் காட்டிப் பேசுவதல்ை, இவ் வானும் என் கிருள். எல்லாமும் என்றது எல்லோமும் என நின்றது. உலகம் நிலவுவது கண்முன் தெரிவதாதலின் காத்தலை முதலில் உண்டாக்கியவனும் பிறகு மறைப்பவனும் அவனே ஆதலின், "காத்தும் படைத்தும் கரந்தும்’ என்ருள். இவை யாவும் அவனுக்கு அருஞ்செயல் அல்ல. விளையாட்டுப் போன்றவை: என்ற கருத்தால், "விளேயாடி’, என்ருள். விளையாட்டு ஆடுபவர்களுக்கும் பார்ப்பவர்களுககும் இன்பம் தருவது போல இறைவன் திருவிளையாடல்கள் அவ னு க் கு ம் அவனுடைய அன்பர்களுக்கும இனபம் தருவன. அவனுடைய செயல்கள் யாவும் விளையாட்டு என்பதை, "உலகம் யாவை யும் தாம் உள ஆக்கலும், நிலைநிறுத்தலும நீக்கலும் நீங்கலா, அலகி லாவிளே யாட்டுடையார்' என்று கம்பர் கூறுவத ஞலும் உணரலாம். - - .

விளையாடி-விளையாடுபவன்; வினையாலணேயும் பெய்ர். விளையாடியினுடைய வார்த்தை. வார்த்தையும் என்னும் உம்மை, அவனேப் பற்றிய பிற இயல்புகளையும் பேசுவதைக் குறிக்கும் எதிரது தழி இய. எச்ச உம்மை. பேசி என்றது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/63&oldid=579256" இலிருந்து மீள்விக்கப்பட்டது