பக்கம்:திருவெம்பாவை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுனைநீர் ஆடுவோம் 63

வெறுமனே பேசுவதெல்லாம் இறைவனுடைய குண நலங் களாகவே இருக்கும் என்பதைக் குறிப்பித்தது. பல வளைகள் அணிந்த பெண்களாதலின் அவை ஒலித்தன. கன்னிப் பெண்கள் பல வளைகள் அணிவது இயல்பு, பெண்கள் ஆண் களைவிட நீண்ட ஆடையை உடுத்துபவர்களாதலின், வார் கலைகள்' என்ருள். ஆர்ப்பு-ஒலி. அரவம்-பிறர் காதில் விழும்படி ஒலிக்கும் ஒசை. அணி குழல்-அழகையுடைய கூந்தல்; பல அணிகலன்களை அணிந்த கூந்தல் என்றும் ஆம். அந்தக் கூந்தலில் மலர்களைச் சூடியிருத்தலின் அவற்றின் மேல் வண்டுகள் முழங்கின. பூ என்றது தாமரை முதலிய நீர்ப் பூக்களே. திகழும் பொய்கை: இந்தப் பொய்கையில் பூத்ததஞ ல் அவை திகழ்கின்றன. பொய்கை-மனிதர் ஆக்காத நீர் நிலை. குடைதல்-மூழ்கி மூழ்கி எழுந்து விளையாடல். உடையான்-நம்மை உடையவன்; சுவாமி என்ற வட சொல் இந்தப் பொருளே உடையதே. பொற் பாதம்-பொலிவு பெற்ற திருவடிகள்; பொன்னைப் போன்ற திருவடிகள் என்னலும் ஆம். 'பொன்வண்ணம் எவ் வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்' என்று வொன் வண்ணத்தந்தாதியில் வருவது காண்க. ஏத்திஉயர்வாகப் புகழ்ந்து. பல பெண்களும் ஆடப் புக்கமையின் அந்தச் சுனே பெரிய சுனையாக இருக்கிறது.

இறைவனைப் பாடி நீராடுவோம் என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/64&oldid=579257" இலிருந்து மீள்விக்கப்பட்டது