பக்கம்:திருவெம்பாவை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பிராட்டியும் பிரானும் போன்ற பொய்கையில் ஆடுவோம்

பெண்கள் யாவரும் சேர்ந்து நீராடப் போகிருர்கள். அங்கே உள்ள பொய்கையைப் பார்க்கிரு.ர்கள், குவளை மலர் களும். செந்தாமரைப் பூக்களும் நிறையப் பூத்து இருக் கின்றன. பலவகைப் பறவைகள் அங்கும் இங்குமாகப் பறந்து அந்த மலரில் உட்காருகின்றன. சில இடங்களில் தண்ணீர்ப் பாம்புகள் தோன்றுகின்றன. அவற்றை எல்லாம் அவர்கள் பார்க்கிரு.ர்கள். தம்முடைய உடம்பிலுள்ள அழுக்குப் போகப் பல பேர் வந்து அங்கே மூழ்குகிரு.ர்கள்.

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தால், பின்னும் அரவத்தால் தங்கள் மலம்கழுவு வார்வந்து சார்தலிளுல்.

இப்படி இருப்பதை உவமையாக வைத்து. "இந்தப் பொய்கையானது எம்பெருமாட்டி உமாதேவியையும், எம் தலைவனுகிய சிவபெருமானையும் போன்று இருக்கிறது” என்று சொல்கிருள். பைங்குவளைக் கார்மலர் போன்று உமாதேவி இருக்கிருள். குவளையில் கருங்குவளை, செங்குவளை என்று இரண்டு வகை உண்டு. இங்கே சொன்னது கருங்குவளே ஆதலால் "பைங்குவளேக் கார்மலர்” என்ருள். இது உமா தேவியை நினைப்பூட்டுகிறது. -

சிவபெருமான் செம்மேனி உடையவன். சிவன் எனும் பெயர் தனக்கே உடைய செம்மேனி அம்மான்' என்பர். செந்தாமரைப் பூக்கள் எல்லாம் இறைவனுடைய திரு மேனியை நினைப்பூட்டுகின்றன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/65&oldid=579258" இலிருந்து மீள்விக்கப்பட்டது