பக்கம்:திருவெம்பாவை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராட்டியும் பிரானும் போன்ற... 65

செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தால்.

அங்கு அங்கு உருகு இனத்தால் என்று பிரித்து இறைவைேடு சார்த்தவேண்டும். அங்கங்கே உள்ள அன்பர் கள் கூட்டமாக இருந்து இறைவனே உன்னுகிறர்கள்: உருகு கின்ற இனம், பக்தர்கள் . -

பின்னும் அரவத்தால். - இறைவனிடத்தில் பாம்புகள் அணிகலளுகஇருக்கின்றன. அதனால், பின்னும் அரவத்தால் என்கிரு.ர்கள். அரவம் என்பதற்கு ஓசை என்றும் பொருள் கொள்ளலாம். உள்ளம் உருகுகின்ற பக்தர்கள் பல வகையாக இறைவனைப் பாடி ஒலி எழுப்புவதால் அரவம் என்று சொன்னதாகவும் பொருள் கொள்ளலாம். - - - -

மக்களுடைய பிறவிக்குக் காரணமானவை மூன்று மலங் கள். அந்த மலங்களைப் போக்க வேண்டுமானல் இறைவனேச் சார்ந்து பக்தி செய்யவேண்டும். ஆதலால்,

தங்கள் மலம்கழுவு வார்வந்து சார்தலினல் என்று சொல்கிருள். இவ்வளவும் சிலேடையாக அமைந் தவை , ' இத்தகைய பான்மையில்ை நீர் பொங்கி வருகின்ற மடுவானது எம்பெருமாட்டி உமாதேவியையும். எம் கோளுகிய சிவபெருமானேயும் போன்று இசைந்து இருக் கிறது.' - -

எங்கள் பிராட்டியும் எம்கோனும் போன்று இசைந்து.

"அந்த மடுவில் நாம் புகுந்து பாய்வோமாக' 'என்கிருள். கன்னிப்பெண்கள் ஆதலால் மெல்ல இறங்கிக் குளிக்காமல் குதித்துப் பாய்கிருர்கன். - -

பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/66&oldid=579259" இலிருந்து மீள்விக்கப்பட்டது