பக்கம்:திருவெம்பாவை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

தை மாதம் முதல் தேதி நீராடுவதற்குத் தனிச் சிறப்பு உண்டு. மார்கழி முழுவதும் விடியற்காலேயில் நீராடி அம்பிகையை வணங்குவார்கள். அம்பிகையின் படிமத்தை வைத்து அதற்குப் பூஜை முதலியன செய்வார்கள். இவ்வாறு நோன்பு இருப்பதால் இதைப் பாவை நோன்பு என்று சொல்வது வழக்கம். ஆண்டாள் திருப்பாட்டில் இதைப்பற்றிய செய்தி வருகிறது. பொதுவாக மார்கழி மாதம் தெய்வ சம்பந்தமுடையது. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்? என்று கண்ணபிரான் கீதையில் சொல்கிருர். நாமோ மார்கழி மாதத்தைப் பீடை மாதம் என்று வழங்குகிருேம். அது தவறு. மற்ற மாதங்களில் எல்லாம் மக்கள் பல வகையான விழாக் களைக் கொண்டாடுவார்கள். சுற்றத்தார் அனைவர் களுடனும் சேர்ந்து இன்பக் களிப்பு அடைவார்கள். தெய்வத்தையும் வழிபடுவார்கள். ஆனல் மார்கழி மாதம் முழுவதுமே வேறு எந்தக் காரியமும் செய் யாமல் தெய்வத்தை வணங்குவதையே தம்முடைய குறிக்கோளாக வைத்து ஒழுகுவார்கள். அதனுல்தான் மார்கழிக்குத் தெய்வத் தன்மை உண்டாயிற்று. இது அடிப்பட்டு வந்த வழக்கு. அது பீட மாதமேயொழிய பீடை மாதம் அன்று. தெய்வத்தைப் பீடத்தில் ஏற்றி, மனமாகிய பீடத்திலும் வைத்து வழிபடுகின்ற மாதம் அது. அதனல் மார்கழி மாதம் தெய்வங்களுக்குப் பூஜை விசேஷமாக நடக்கும். தனுர்மாச பூஜை எல்லாக் கோவில்களிலும் பெருமாள் கோவிலானுலும் சரி, சிவபெருமன் கோவிலானுலும் சரி,விடியற்கால

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/7&oldid=579200" இலிருந்து மீள்விக்கப்பட்டது