பக்கம்:திருவெம்பாவை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடி ஆடுவோம் 69

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்!

இந்தப் பாடலினல் இறைவனையும். இறைவியையும் ஒருங்கே பாடி நீராடலாம் என்று சொல்கிருள்.

காதார் குழையாடப் பைம்பூண் கலனுடக் கோதை குமலாட வண்டின் குமாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி - வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி, ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் . பேதித்து கம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பர்வாய்!

(காதிலே உள்ள குழைகள் ஆடவும், பசிய பொன்னல் ஆகிய அணிகலன்கள் ஆடவும், மலர்கள் அணிந்த குழல்கள் ஆடவும். அந்தப் பூக்களில் மொய்த்த வண்டுக் கூட்டங்கள் ஆடவும், மிகவும் குளிர்ச்சியான நீரில் ஆடி, ஆண்டவன் எழுந்தருளியிருக்கும் திருச்சிற்றம்பலத்தைப் பாடி, வேதத் தால் சொல்லப்படும் அவனுடைய திறங்களைப் பாடி, வேதத் தின் பொருளாகவே அவன் இருப்பதையும் பாடி. எல்லா வற்றுக்கும் ஆதியாக இருக்கும் அவனுடைய திறங்களைப் பாடி, அவன் எல்லாவற்றுக்கும் முடிவாக இருக்கும் தன்மை யையும் பாடி, நம்முடைய வினைக்கேற்ப நமமை வெவ்வேருக வளர்த்து எடுத்து. கைநிறைய வளையல்களே அணிந்திருக்கிற எம்பெருமாட்டியின் திருவடிப் பெருமையையும் பாடி நாம் ஆடுவோமாக!) -

பெண்கள் காதில் குழையை அணிவார்கள். அது மங்கலத்திற்கு அறிகுறி. பசும்பொன்னலான அணிகலன்கள் ஆதலின், பைம்பூண் கலன்’ என்கிருள். பெண்கள் சூடுகின்ற மாலையைக் கோதை என்று சொல்வது வழக்கம். குழலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/70&oldid=579263" இலிருந்து மீள்விக்கப்பட்டது