பக்கம்:திருவெம்பாவை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 திருவெம்பாவை

கோதை சூட்டியிருக்கிார்கள். ஆதலால். 'கோதை குழல் ஆட' என்கிருள். அடுத்து, மலர்கள் இருக்கும் இடத்தில் வண்டுகள் வந்து மொய்க்கும். இந்த மகளிர் சூடிய கோதை யில் வண்டுகள் மொய்க்கின்றன. அவர்கள் நீராடும்போது இந்த வண்டுகள் மேலே வந்து கூட்டமாக ஆடுகின்றன. "வண்டின் குழாமாட..

மிகவும் குளிர்ச்சி பொருந்திய புனல் ஆதலால், சீதப் புனல்' என்று சொல்கிருள். மார்கழி மாதத்தில் குளிர்ந்த புனவில் நீராடுகிறவர்கள் மற்ற மாதங்களில் எளிதில் நீராடுவார்கள்.

இறைவன் இல்லாத இடம் என்று ஒன்று இல்லை. அவன் நடம் செய்யும் இடம் சிற்றம்பலம். சிற்றம்பலம் பாடி.” வேதத்தில் பல பொருள்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. "இறைவனைப் பற்றிய தன்மைகள் எல்லாம் அவற்றில் உள்ளன. அவற்றையும் பாடுவோம். வேதத்திலுள்ள எல்லாப் பொருள்களிலும் திரண்ட பொருளாகச் சிவ பெருமான் இருக்கிருன். அப்பொருள் ஆமாபாடி.”

அவன் சோதி வடிவினன். திருவண் ணுமலைப்பெருமானுக் குச் சோதி என்று ஒரு பெயர் உண்டு. அந்தப் பெருமான் பல வகையான திருவிளையாடல்களைச் செய்கிருன். அவற்றை எல்லாம் நாம்பாடுவோம்"; சோதி திறம்பாடி. அவன்தன் மார்பிலும்,திருமுடியிலும் கொன்றையை அணிந்திருக்கிருன், அவனுக்கு அடையாளம் கொன்றை என்பதை முன்பே தெரிந்துகொண்டோம். சூழ்கொன்றை - சுற்றி அணிந்த கொன்றை ஆடவர்கள் அணியும மாலையைத் தார் என்று கொல்வது வழக்கம். அவனே எல்லாவற்றுக்கும் ஆதியாக வும் இருக்கிருன்; அந்தமாகவும் இருக்கிருன். எனவே, ஆதி திறம்பாடி அந்தம் ஆமாபாடி’ என கிருள்.

மக்கள் பல வகையான அனுபவங்களைப் பெறுகிருர்கள். இன்பம், துன்பம் அவர்களே வந்து அடைகின்றன. ஒருவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/71&oldid=579264" இலிருந்து மீள்விக்கப்பட்டது