பக்கம்:திருவெம்பாவை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனல் பாய்ந்து ஆடுவோம் 75

கிருர்கள் இவளோ விண்ணுேரையும் தான் பணிவதில்லை’ தான்-இவள். விண்ளுேரையும் என்ற உம்மை தொக்கது.

இறைவன் என்றும் நிலையாக நின்று உலகத்தைக் காப்பாற்றுபவளுதலின், பேரரையன்' என்ருள். இங்ங்னே. இத்தகைய மெய்ப்பாடுகள் உண்டாகும்படி. பித்து-வேறு ஒன்றையும் கவனியாமல் இறைவனையே நினைந்தும்புகழ்ந்தும் வணங்கியும் இருக்கும் நிலை. ஆமாறும்-ஆகும் வண்ணமும்; ஆவதோடு அதற்குரிய பலவகைச் செயல்களைச் செய்கிருள் என்பதை உம்மை குறித்தது; எதிரது தழி இய எச்ச உம்மை. இவ்வண்ணம் - இவ்வாறு பித்துப் பிடிக்குமாறு. ஆட் கொள்ளும்-தக்மகே தொண்டு புரியும் அடிமையாகச் செய்து கொள்ளும். வித்தகர்-சர்வக்ஞர். அவருடைய தாளைப் பணிவோமாக’ என்கிருள். இவள் இருக்கும் நிலை யைக் கண்டேனும் நாம் இறைவனைப் பணிவோம்’ என்று குறிப்பிக்கிருள். தாள்- திருவடியை. வார்-கச்சு. உருவம்அழகு. பூண்-அணிகலன்கள். இவ்வளவும் பெற்றும் என்ன பயன்? இறைவனைப் பாடிப் பணிதலே பெரிய ஆபரண மாகும்’ என்பது குறிப்பு. .

சிற்றின்பத்திலும் பேரின்பத்திலும் நாணத்துக்கு இட மில்லை. நாணம் விட்டு ஒன்றுபட்டால்தான் இன்பம் கிடைக்கும்; நாளுெ ணுததோர் நாணம் எய்தி (திருக் கழுக்குன்றப் பதிகம்) என்று பிறிதோரிடத்திலும் கூறுவார். ஆதலால், வாயார நாம் பாடி என்கிருள். வாய் நிரம்பப் பாடி' என்று பொருள். வாய் நிரம்புவதாவது, வேறு பேச் சுக்கு இடம் கொடாமல் இறைவன் பாடலையே பாடுதல். ஏர் அழகு எழுச்சியும் ஆம். உருவம் - தனக்கு உரிய இலக்கணங்களுடன் அமைந்த உருவம் பூம்புனல்-பொலிவு பெற்ற புனல் மலர்கள் பூத்திருக்கும் புனல் என்பதும் ஆம். கன்னிப் பெண்கள் ஆதலின் மெல்ல இறங்கிக் குளிக்காமல், பாய வேண்டும் என்கிருள்.

இறைவனுடைய புகழைப் பாடி நாம் நீராடுவோம் என்பது கருத்து. - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/76&oldid=579269" இலிருந்து மீள்விக்கப்பட்டது