பக்கம்:திருவெம்பாவை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூம்புனல் பாய்ந்து ஆடுவோம் §3

பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் என்கிரு.ர்கள்.

செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம்கம் பாலதா கொங்குண் கருங்குழலி, கந்தம்மைக் கோதாட்டி இங்குகம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனே அங்கண் அரசை, அடியோங்கட்கு ஆரமுதை, கங்கள் பெருமானப் பாடி கலம்திகழப் - பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். (17)

(பூந்தாது உடைய கரிய கண்ணேப் பெற்ற பெண்ணே. சிவந்த கண்ணே உடைய திருமாவிடத்தும். திசைதோறும் முகத்தை உடைய நான்முகனிடத்தும்,பிறதேவர்களிடத்தம்: வேறு எங்கும் இல்லாததாகிய ஒப்பற்ற பேரின்பத்தை நம்மிடத்தில் உள்ளதாக, நாம் கோதுகள் உடையவர்கள் ஆன லும் அவற்றை எண்ணுமல் ஆட்கொண்டு அந்தக் கோதுகளை எல்லாம் நீக்கி, பலரும் காணுமல் இருக்கின்ற அவன் இங்கே நம்முடைய வீடுகள்தோறும் எழுந்தருளு கிருன். அத்தகைய வீரம் பொருத்தியவனே. கருணை பொழி வதனால் அழகிய கண்ணேயுடைய அரசனே. அடியவர்களாகிய நமக்கு அரிய அமிர்தம் போன்றவனே. நமக்கெல்லாம். தலைவனப் பாடி, நன்மை விளங்கும்படியாகத் தாமரைப் பூக்கள் நிறைந்த இந்தப் புனலில் பாய்ந்து ஆடுவோமாக.1

திருமால் சிவந்த கண்ணையுடையவன். ஆத்வில்ை புண்டரீகாட்சன் என்னும் பெயர் பெற்றன். நான்கு முகங் களால் நாலு திசையும் நோக்குபவன் ஆதலால் பிரமனை, 'திசைமுகன்"என்ருள். திருமால், பிரமன் ஆகிய துருவரையும் சொன்னமையினால் தேவர்கள்’ என்று அவர்கள் அல்லாத இந்திரன் முதலிய பிற தேவர்களேக் குறித்தாள். இன்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/84&oldid=579277" இலிருந்து மீள்விக்கப்பட்டது