பக்கம்:திருவெம்பாவை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெம்பாவை

8

3.

"நாம் முழுமையும் துய்மை உடையவர்களாக இல்லா விட்டாலும் அழுக்குள்ள குழந்தையை எடுத்து அதனுடைய அழுக்கைப் போக்கித் தாய் அதன்ை அணைப்பதுபோல், நம்முடைய கோதுகளே நீக்கி அருளுகிருன். அதோடு அவனைத் தேடி எங்கும் செல்லாமல் இங்கே நம்முடைய இல்லங்கள் தோறும் அவன் எழுந்தருளுகிருன்.’’

  • கந்தம்மைக் கோதாட்டி இங்குகம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி.

" அப்படி எழுந்தருளும் எம்பெருமான் தன்னுடைய சிவந்த தாமரை போன்ற ஒளிபெற்ற பாதங்களே நமக்குத் தந்தருளுகின்ருன்.' -

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகன.

அவன் பெரிய வீரன். எட்டு வகையான வீரங்களைச் செய்வதற்குரிய தலங்களை உடையவன். அவனுடைய கண் களோ எப்போதும் அருள் சுரந்துகொண்டிருக்கும். நமக் கெல்லாம் தலைவனுகவும், நம்மை அடியவர்களாகக் கொண்டமையில்ை நமக்கு அமுதம் போலச் சுவை உள்ள வனுகவும் இருக்கிருன்.

அங்கண் அரசை. அடியோங்கட்கு ஆரமுதை. "உலகிலுள்ள தலைவர்களைப் போல அன்றி, நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் தருகின்றவன். ஆகையால் நம் பெருமாளுகிய அவனே நாம் பாடவேண்டும். அதனல் நமக்கு எல்லாவகையான நலங்களும் திகழும்.'

நீங்கள் பெருமானப் பாடி நலம்திகழ

  • தாமரைப் பூக்கள் நிறைந்த இந்தப் புனலில் பாய்ந்து ஆடுவோமாக: - . . . . . . . . . - -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/83&oldid=579276" இலிருந்து மீள்விக்கப்பட்டது