பக்கம்:திருவெம்பாவை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. கண்ணுரமுதமாய் நின்ருன்

மீண்டும், நீராடும்போது ஆண்டவனுடைய திருவடி யைப் பாடிக்கொண்டு நீராட வேண்டுமென்பதைச் சொல்ல வருகிார்கள். திரு வெம்பாவை திருவண் ணு மலையில் பாடப் பெற்றது. ஆதலின் முதலில் அண்ணுமலையான்’ என்று சொல்கிருள், - -

அவனுடைய பாதமாகிய தாமரையைச் சென்று வணங்குகின்ற தேவர்கள் முடிகளில் பல மணிகள் பதித்து இருக்கின்றன. ஆனல் இறைவனுடைய பாதமலரை இறைஞ்சும்போது அந்த மணிகள் தம்முடைய ஒளியை இழந்துவிடுகின்றன. அவனுடைய அடிக்கமலம் அவ்வளவு செம்மையாக இருக்கிறது,

அண்ணு மலையான் அடிக்கமலம் சென்றுஇறைஞ்சும் விண்ணுேர் முடியின் மணித்தொகைவிறு அற்ருற்போல்,

'அந்த மா னி க் கங் கள் எல்லாம் ஒளியற்றதுபோல, நம்முடைய கண்ணுக்கு முன்னே தோற்றுகின்ற சூரிய னுடைய கதிர்கள் ஒளிவிட மேகங்கள் எல்லாம மறைந்து விடுகினறன. இரவிலே ஒளிவிட்டுக்கொணடிருந்த நட்சத் திரங்கள் தம்முடைய குளிர்ந்த ஒளி மங்கிவிடுகின்றன. இப்போது அவை கண்ணுக்குத் தெரியாமல் ஆகிவிட்டது. போலத் தோறறுகின்றன. -

கண்ளுர் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணுர் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம்அகல. இனி, சிவபெருமானுடைய பெருமையைச் சொல் கிருர்கள். அவன் பெண், ஆண், அலி என்று எல்லாமாகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/87&oldid=579280" இலிருந்து மீள்விக்கப்பட்டது