பக்கம்:திருவெம்பாவை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 . திருவெம்பாவை

கூட்டங்கள் ஒளியற்றதபோல. கண் நிறைந்த சூரியனுடைய கிர ணங்கள் வந்து மேகங்கள் எல்லாம் மறைந்துபோக, ந ட் ச த் தி ர ங் க ள் குளிர்ந்து ஒளி மழுங்கி போக: பெண் ஆகவும். ஆண் ஆகவும், அலியாகவும் விளங்குகின்ற, ஒளி சேர்ந்த விண்ணுகவும் மண் ஆகவும் இத்தனையும் வேருகவும் இருக்கும நம்முடைய கண் நிறைந்த அமிர்தமாய் நின்ற வ னு ைடய திருவடியைப் பாடி, பெண்ணே, இந்தப் பூக்கள் நிறைந்த புனலில் பாய்ந்து ஆடுவோமாக!)

திருவண்ணுமலையில் பாடப்பெற்றதாதவிள் முதலில் அண்ணுமலையான் என்கிருள். அவன் அடி தாமரைபோல இருக்கிறது. தேவலோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பதவி பறிபோகாமல் இருப்பதற்கு அவனே வந்து வணங்குகிருர் கள். அவர்கள் சிறந்த பதவியை உடையவர்கள் ஆதலின் முடியை அணிந்திருக்கிரு.ர்கள். அந்த முடிகளில் மாணிக்கக் கூட்டங்கள் ஒளிர்கின்றன. இறைவனுடைய திருவடியை அவர்கள் வணங்கும்போது திருவடிச் சிறப்பு அந்த ஒளியை மங்கச் செய்கிறது. அடிக்கமலம்-திருவடியாகிய

தாமரை .

கண் இருந்தும் சூரியன் இல்லாவிட்டால் எதுவும் தெரியாது. ஆதலால் கண்ணுர் இரவி என்கிருள். சூரியன் தோன்றினவுடன் வானததிலுள்ள மேகங்கள் எல்லாம் மறைந்து போகின்றன. நட்சத்திரங்கள் குளிர்ந்த ஒளி மங்கிப்போய் அகன்று போகின்றன. -

இறைவன் சிலசமயம் பெண்ணுக இருக்கிருன். சிலசமயம் ஆணுக இருக்கிருன், சில சமயம் இரண்டும் இல்லாமல் அலி போன்று இருக்கிறன். பெண்ணுகி ஆளுய் அலியாய்” என்கிருள். வானத்தில் சூரியனும் சந்திரனும் தோற்று வதால்அது ஒளியுடையதாகிறது.ஆதவின் பிறங்கொளிசேர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/89&oldid=579282" இலிருந்து மீள்விக்கப்பட்டது