பக்கம்:திருவெம்பாவை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணுரமுதமாய் நின்ருன் 89

விண் ஆகவும், மண் ஆகவும், இத்தனையும் அவகை இருக்கிருன். அவற்ருேடு வேறு உலகமாகவும் அவனே இருக் கிருன். ஆதலின், விண்ணுகி மண்ணுகி இத்தனையும் வேருகி’ என்கிருள். கண்ணுல் கண்டு பருகுவதுபோல உட்கொள் வதற்கு உரியவன் ஆதலின், கண்ணுர் அமுதம்' என்கிருள். அமுதம் சாவாமையைத் தருவது ஆதலால் இனிப் பிறக்க மாட்டோம் என்றபடி. கண்ணுர் அமுதம் என்பது திருவண்ணுமலைப் பெருமானுக்குரிய பெயர்களில் ஒன்று. இறைவன் என்றும் சாஸ்வதமாக இருப்பவன் ஆதலின், நின்ருன் என்ருள். கழல்-திருவடியில் அணியும் அணிகலன். அது அடியைக் குறித்தது. ஆதலின் ஆகுபெயர். அதனைப் பாடிக் கொண்டு இந்தப் பூக்கள் நிறைந்த புனலில் ஆடுவோ மாக என்கிருள். கன்னி ஆதலின் குதித்து ஆடுவோம் என்று சொல்வா ளாக, பாய்ந்து ஆடு’ என்கிருள். இறைவனுடைய பெருமையைச் சொல்லிக்கொண்டு நீராடலாம் என்பது

கருத்து.

தி.-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/90&oldid=579283" இலிருந்து மீள்விக்கப்பட்டது