பக்கம்:திருவெம்பாவை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. எங்கு எழில் என் ஞாயிறு:

'திருமணம் செய்து கொடுக்கும்போது உலகத்தில், உம்முடைய கையில் ஒப்படைக்கின்ற இந்தப் பெண் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று மிகப் பழங்காலம் முதற் கொண்டு சொல்வார்கள். அந்தத் திருமணம் எங்களுக்கு வேண்டியதில்லை. உலகத்திலுள்ள பிற மனிதர்களைப் போல நாங்கள் மணம் சுெய்துகொள்ள மாட்டோம். யாருக்கேனும் எம்மை மணம் செய்து வைத்துவிடுவார்களோ என்ற அச்சம் எங்களுக்கு உண்டு.”

உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று அங்குஅப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்.

"எங்கள் பெருமானே, உன்னிடத்தில் ஒன்றை உரைப் போம். நீ கேட்டருள்வாயாக." r

எங்கள் பெருமான் உனக்குஒன்று உரைப்போம்கேள். "நாங்கள் பருவம் நிரம்பியவர்கள். எங்களுடைய கொங்கைகள் நின் அன்பர்கள் அல்லாதவர்களுடைய தோள் களேச் சேராமல் இருக்கவேண்டும். பிறரையும் அணையும் துர்ப்பாக்கியம் எங்களுக்கு இருக்கக்கூடாது.

எம்கொங்கை கின்அன்பு ரல்லார்தோள் சேரற்க. - "எம்முடைய கைகள் உனக்கு அல்லாமல் வேறு எந்த வேலைகளையும் செய்யாமல் இருக்கட்டும். எந்தச் செயலைச் செய்தாலும் அது உன்னுடைய பணியோடு தொடர்புடைய தாக இருக்கட்டும்.' .

எம்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/91&oldid=579284" இலிருந்து மீள்விக்கப்பட்டது