பக்கம்:திருவெம்பாவை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கு எழில் என் ஞாயிறு 91

இரவாலுைம், பகலானலும் எங்களுடைய கண்கள் அழகுடையது என்று வேறு ஒன்றையும் காணுமல் இருக் கட்டும். உலகில் அழகுள்ள பொருள்கள் என்று எத்தனையேர் பொருள்கள் இருக்க, பிறர் எல்லாம் அவற்றைக் காண்கிருர் கள். நாங்கள் அப்படிக் காணக் கூடாது. உன்னுடைய அழகைக் காட்டிலும் அழகான பொருள் வேறு ஒன்றும் இல்லையாதலின் இரவானுலும், பகவானுலும் வேறு ஒன்றை யும் காணுமல் இருக்கவேண்டும்.'

கங்குல் பகல்எம்கண் மற்றென்றும் காணற்க.

"இத்தகைய தன்மை எங்களுக்கு இங்கே கிடைக்க வேண்டும். எம்முடைய தலைவனகிய நீ எங்களுக்கு இதனை அருள் செய்வாயாளுல், சூரியன் கிழக்கே எழாமல், வேறு திசையில் எழுந்தால் அதைப்பற்றி எங்களுக்கு என்ன கவலை??? . . . . . .

இங்கிப் பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல் எங்கு எழில்என் ஞாயிறு எமக்குஏலோர் எம்பாவாய்!

"சூரியன் எந்தத் திசையில் எழுந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. இங்கே எங்கள் வேண்டுகோளேக் கேட்டு அருள் செய்வாயாக’ என்கிருர்கள். . . . . . .

உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று அங்குஅப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால் எங்கள்பெருமான் உனக்குஒன்று உரைப்போம்கேள் எம்கொங்கை நின்அன்பரல்லார்தோள் சேரற்க எம்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகல்எம்கண் மற்ருென்றும் காணற்க இங்கிப் பரிசே எமக்குஎம்கோன் கல்குதியேல் . . . எங்குஎழில்என் ஞாயிறு எமக்குஏலோர் எம்பாவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/92&oldid=579285" இலிருந்து மீள்விக்கப்பட்டது