பக்கம்:திருவெம்பாவை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 திருவெம்பாவை

உங்கை என்று பன்மையில் சொல்விப் பின்பு உரிமை யினுல் உனக்கே என்று ஒருமையில் சொல்கிருள். பிள்ளை என்பது பெண்பிள்ளையைக் குறித்தது. பெண்களே, பெண் பிள்ளை' என்று சொல்வது வழக்கம் அடைக்கலம்-சரணு கதி. 'நீ இவளை எவ்வாறும் பயன்படுத்திக் கொள்ளலாம்’ ’ என்ற கருத்துடையது. திருமணத்தில் பாணிக்கிரகணம் செய்யும்போது, இந்தப் பெண் உனக்கே உரியவள்" என்று சொல்வார்கள். இது மிகப்பழங்காலம் தொட்டு வருகின்ற பழக்கம். அந்தப் பழக்கம் எங்களுக்கு வரக்கூடாது. வேறு யாருக்கேனும் மணம் செய்து கொடுத்து அந்தப் பழம் சொல்லைப் புதியதாக இப்போது சொல்லக் கூடும் என்ற அச்சம் இப்போது எங்களுக்கு இருக்கிறது. புதுக்கும்-புதிய தாக்கும். உன் கையில் கொடுக்கும் இந்தப் பெண் பிள்ளை உனக்கே அடைக்கலம் ஆவாள் என்ற அந்தப் பழைய சொல்லை மீட்டும் புதிப்பிப்பார்களோ என்ற எம்முடைய அச்சத்தால் எங்கள் பெருமானே, உனக்கு ஒரு விண்ணப்பம். இதனே நீ கேட்டருள்வாய். பருவம் உடைய எங்களுடைய கொங்கை உன்னிடம் அன்பு செலுத்தாதவருடைய தோள் களேச் சேர்ாமல் இருக்கட்டும். எங்களுடைய கை உனக்கு அல்லாமல் வேறு எந்தப் பணிகளையும் செய்யாமல் இருக் கட்டும். இரவானுலும், பகலானலும் எம்முடைய கண்கள் உன்னேயன்றி வேறு ஒன்றையும் காணுமல் இருக்கட்டும். இங்கேயே இவ்வாறு எங்களுடைய வேண்டுகோளுக்கிணங்க அருள் செய்வாயானல் சூரியன் எங்கே உதித்தால் என்ன?" என வேண்டியவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/93&oldid=579286" இலிருந்து மீள்விக்கப்பட்டது